ETV Bharat / city

'நன்றி கெட்ட நாயே' - மனிதர்களா நாய்களா?

நன்றி மறந்ததற்கு, 'நன்றி கெட்ட நாயே' என்று நாயை உவமையாக சொல்லும் சொலவடை நம்மிடையே உள்ளது. உண்மையில் சொல்லப்போனால், நன்றி மறந்தது நாய்கள் இல்லை மனிதர்களே என்பதுதான் யதார்த்தமான உண்மை. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு...

thumbnail
thumbnail
author img

By

Published : Dec 27, 2019, 8:28 PM IST

Updated : Dec 27, 2019, 10:59 PM IST

மனிதர்களுக்கு மட்டும்தான் இந்த உலகம் சொந்தமானது என்ற எண்ணத்தில் பலர் சுற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த பூமி அனைத்து உயிர்களுக்குமாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. மனிதன் தனக்குத் தேவையான உணவை தேடிக்கொள்வது போலத்தான் இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.

நன்றி கெட்ட நாயே - மனிதர்களா நாய்களா?
நன்றி கெட்ட நாயே - மனிதர்களா நாய்களா?

ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புல், தழை, இலை உள்ளன. ஆனால் நாய்கள் மட்டும் மனிதன் கொடுத்தால்தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது ஏன்?

நமது வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும்போது நாய் வீட்டையே சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது? வீட்டிற்குள் இருந்து யாராவது வந்து அந்த உணவிலிருந்து ஏதாவது ஒரு சிறுபங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் ஏங்கி ஏங்கி நிற்கிறது ?

கல்லைத் தவிர வேறேதும் உண்பதற்கு தன்னிடம் வந்து விழாதா என வெறித்து பார்க்கிறது

சாலையோரக் கடைகளிலோ, தள்ளு வண்டிக் கடைகளிலோ நாம் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும்போது, கல்லைத் தவிர வேறேதும் உண்பதற்கு தன்னிடம் வந்து விழாதா என ஏன் வெறித்து வெறித்து பார்க்கிறது?

நாய்கள் மட்டும் மனிதன் கொடுத்தால்தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும்

குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்கு மனிதகுலம் இடம்பெயர்ந்து அந்த நிலத்தில் வேளாண்மை செய்து தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்துகொண்டது.

குகையில் வாழ்ந்து பழகிய நாம், வீடு கட்டி வாழப் பழகினோம். நிர்வாணமாய் இருந்தவர்கள் இலை தழைகளை சுற்றிக்கொண்டு உடையணிந்தோம். ஏதோ ஒரு ஒலியை எழுப்பி நாளடைவில் அதை மொழியாக மாற்றி பேசக் கற்றுக்கொண்டோம். இப்படி மனித நாகரிகம் பிறந்து வளர்ந்ததில் பல அடுக்குகள் இருக்கின்றன. நாகரிகத்தின் அடுத்தக்கட்டமாக காடுகளிலிருந்து வந்த மனிதன் இன்று பொருளாதாரம், சிந்தனை, அறிவியல், குற்றம் என அனைத்திலும் அசுர வளர்ச்சி கண்டு இருக்கின்றான். நாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் உதித்திருக்கும்...

அன்பும், நன்றியுணர்வும் இருக்கும்வரை நாய் அனாதை

ஆதி மனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும்போது அவன் மட்டும் வரவில்லை. தனக்குப் பயன்படக்கூடிய, தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகளான ஆடு, மாடு, குதிரை, நாய் உள்ளிட்ட வீட்டில் வளர்க்க ஏதுவான விலங்குகளையும் தன்னோடு அழைத்துக்கொண்டே வந்தான். அந்த விலங்குகளில் முதன்மையான விலங்கினம் 'நாய்'. குரங்கிலிருந்து பிறந்த ஆதி மனிதனுக்கு முதல் நண்பன் 'நாய்' தான் என்றால் மிகையாகாது.

நரி, ஓநாய், செந்நாய் குடும்ப வகையைச் சேர்ந்ததுதான் தற்போது நம்மிடையே உலாவும் நாயும். அவற்றைப் போல நாயும் வேட்டையாடும் காட்டு விலங்குதான். நரி, ஓநாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருந்த அனைத்து குணங்களும் நாய்க்கும் இருந்தது. ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அதுதான் நாயை இன்று உணவிற்காக ஏக்கத்துடன் தெருவில் அலையவிட்டிருக்கிறது. அந்த குணம் மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத அதீத நன்றியுணர்வும் அன்பும் .

வீடு இல்லாத நாய்களின் நிலை
வீடு இல்லாத நாய்களின் நிலை

எலித் தொல்லை மனிதர்களுக்கு இருக்கும்வரை பூனை பாக்கியசாலி. அதைப்போல, அன்பும், நன்றியுணர்வும் இருக்கும்வரை நாய் அனாதை. இதை நாம் மறுக்கலாம். நாய்களை வீட்டில் ஒருவராக வளர்த்துவருகிறோம் என்று கூறலாம். அப்படி இருந்தால் தெருவில் ஏன் நாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன?

வீட்டைக் காவல் காக்கும் இடத்தை சிசிடிவி கேமராக்கள் நிரப்பியதால், வீட்டின் மதிப்பிற்கேற்ப சில வீடுகளில் நாய்கள் வீட்டிற்கு உள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும் குடியேறியன. பல நாய்களுக்கு, கண்ணதாசன் சொன்னது போல், “தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” என்றாகிப் போனது.

பல நாய்களுக்கு தெய்வம் தந்த வீடு வீதி
பல நாய்களுக்கு தெய்வம் தந்த வீடு வீதி

மனிதன் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விலங்கு (Social animal). நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகிவிட்டது. நம்முடன் அதற்குப் பேச மட்டும்தான் தெரியாது. நம் உணர்வுகளை, மொழியைப் புரிந்துகொள்ளும். நம் நண்பர் யார், பகைவர் யார் என அதற்குத் தெரியும். நம் வண்டியின் சத்தத்தை தொலைவிலிருந்தே கணித்து வாஞ்சையோடு வாலாட்டத் தெரியும். வீட்டில் இருக்கும் சிறுவர்களுடன் விளையாடத் தெரியும்.

அன்பை காட்டுவதில் நாயை மிஞ்ச முடியாது
அன்பை காட்டுவதில் நாயை மிஞ்ச முடியாது

வீட்டிலேயே வளர்ந்த ஒரு பெண் திருமணமாகி அடுத்த வீட்டிற்குச் சென்றால் ஓரமாய் படுத்து கவலைப்படத் தெரியும். தன்னை வளர்த்தவர்களுக்கு யார் மூலமேனும் தீங்கு என்றால் முதலாவதாக வந்து முன் நிற்கும். இப்படி மனிதர்களுக்காக பலவற்றைச் செய்யும் நாய்களில் பெரும்பான்மையானவற்றிற்கு வீடுகள் கிடைப்பதில்லை.

வீடு இல்லாத நாய்களின் நிலை?

வீடுகள் கிடைத்த நாய்கள் செல்லப் பிராணியாகி விடுகிறது. கிடைக்காதவை தொல்லைப் பிராணியாகி தெருக்களில் வாழ்விடம் தேடி அலைந்து கொன்டிருக்கின்றன. தெருநாய்கள் அடி வாங்குவதற்காகவும், வண்டியில் அடிபட்டு உயிரிழக்கவும் படைக்கப்பட்டதாகப் பார்க்கப்படுகிறன. நா. முத்துக்குமார் இப்படி ஒரு கவிதை எழுதியிருப்பார்,

“பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்...”

ஆம் இப்படித்தான் பல நாய்கள் தான் வாழும்வரை பொருட்படுத்தாத மனிதர்களை நாற்றத்தால் அறைந்துகொண்டிருக்கின்றன. உயிரோடு இருக்கும்போதும் அனாதையாக வாழ்கின்றன. உயிரிழந்த பிறகும் அனாதையாக கிடக்கின்றன. இங்கு அனாதை என்ற வார்த்தை மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. அனைத்து உயிர்களுக்கும் சொந்தமான வார்த்தை. ஏனெனில் இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை.

இங்கு அனாதை என்ற வார்த்தை மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை நாய்களுக்கும் சொந்தம்

வாழும்போதும் அனாதையாக வாழ்ந்து, இறந்த பிறகும் அனாதையாக நாய் கிடப்பதும் அதே தெருவில்தான், தன்னையே நம்பி இருக்கும் நாயை மனிதகுலம் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருக்கும். கடைசியில் விலங்குகளுடன் வாழும் மனிதர் யாரேனும் ஒருவர் வந்து அந்த நாயை ஓரமாகவோ, தூரமாகவோ போட்டுவிட்டோ அல்லது அடக்கம் செய்துவிட்டோ செல்வார்கள்.

நாய்கள்
நாய்கள்

ஒரு விலங்கை வேறோடு இடம் பெயர்த்து, அடியோடு அதன் குணத்தை, உணவு முறையை மாற்றி வைத்தது யார் செய்த தவறு? பொதுவாக காட்டுயிர் ஆர்வலர்களின் வாதம் என்பது, காட்டு விலங்குகளுக்கு மனிதர்கள் உணவு கொடுக்கக்கூடாது என்பதுதான். ஏனெனில், ஒவ்வொரு உயிருக்கும் அதனதற்கான உணவைத் தேடிக்கொள்ளும் ஆற்றலை இயற்கை கொடுத்திருக்கிறது. ஆனால், பல விலங்குகளுக்கு மனிதர்கள் உணவை கொடுப்பதால் அந்த விலங்குகள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையிலிருந்து மனித சார்பை நோக்கி நகர்கின்றன. இதற்கு பெயரும் அடிமைப்படுத்துதல்தான். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தினால்தான் அடக்குமுறையா?

நாய்கள்
நாய்கள்

இயல்பிலேயே அசைவ உணவை உண்ணும் நாய்க்கு கொடுக்கவேண்டியது பால் உள்ளிட்ட சைவ உணவு இல்லை இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவே. ஏனெனில் அதுதான் அதன் இயல்பான உணவுப் பழக்கம். ஆனால் பெரும்பான்மையானவர்கள் பாலை உணவாக கொடுக்கிறார்கள். இருந்தாலும், தன்னுடைய இயல்பை மறந்து ஒரு குவளை பால் கொடுக்கும் மனிதர்களுக்கு உண்மையாக இருக்கும் நாய்களுக்கு தற்போது அதைக்கூட தர மறுப்பது யார்?

நாய்கள்
நாய்கள்

ஆனால், இவற்றை எல்லாம் லாவகமாக மறந்துவிட்டு நன்றி மறந்ததற்கு, 'நன்றி கெட்ட நாயே' என்று நாயை உவமையாக சொல்கிறோம். உண்மையில் சொல்லப்போனால், நன்றி மறந்தது நாய்கள் இல்லை மனிதர்கள் என்பதே கசப்பு நிறைந்த யதார்த்தமான உண்மை.

Intro:Body:

dog special

Conclusion:
Last Updated : Dec 27, 2019, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.