சென்னை: 14வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்று உள்ள 30 மாநில அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றன.
லீக் சுற்று முடிவில் பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், மராட்டியம், மணிப்பூர் ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய அணிகள் மோதிக் கொண்டன.
அதில் டை பிரேக்கர் முறையில் பணிப்பூர் அணி 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது. இரண்டாவதாக நடைப்பெற்ற காலிறுதி போட்டியில் ஹரியான மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய அணிகள் மோதின. அதில் ஹரியான அணி 5-க்கு 1 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
மூன்றாவதாக நடைபெற்ற காலிறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் அணிகள் விளையாடின. அதில் உத்தரப் பிரதேச அணி 3-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. நான்காவதாக நடைபெற்ற காலிறுதி போட்டியில் கர்நாடகா அணியும் ஒடிசா அணியும் மோதின.
போட்டி முடிவில் இரு அணிகளும் 3-க்கு 3 என கோல் அடித்ததால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. அனால் அந்த நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. அதில் 3-க்கு 1 என்ற கணக்கில் ஒடிசா அணி அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஹரியான, மணிப்பூர் ஆகிய அணிகள் அறையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
நாளை (நவ.15) நடைபெறும் முதலாவது அறையிறுதி போட்டியில் மணிப்பூர் மற்றும் ஒடிசா அணிகளும், இரண்டாவது அறையிறுதி போட்டியில் ஹரியான மற்றும் உத்தரப் பிரதேச அணிகளும் மோதுகின்றன. அரைஇறுதி சுற்றுக்கு தமிழ்நாடு அணி தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில் காலிறுதி ஆட்டத்தின் முடிவு அமைந்தது.
இதையும் படிங்க: "எனது மகனின் 10 ஆண்டு வாழ்க்கையை சீரழித்த 3 கேப்டன்கள்.." சஞ்சு சாம்சனின் தந்தை கூறியது யாரை தெரியுமா?