சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் இது குறித்து கூறியதாவது, ”தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக கரோனா பரிசோதனை குறைவாக நடைபெற்றுவருகிறது. அதிகளவில் பரிசோதனை செய்தால்தான் நோயாளிகளையும் விரைவாகக் கண்டறிய முடியும்.
ஆனால், திடீரெனெ சோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காண்பிப்பதற்கான முயற்சி நடைபெறுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
மருத்துவர்களின் பரிந்துரையின்றி, நேரடியாகவும் கரோனா பரிசோதனைகளை செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
கரோனா பாதிப்புள்ள பகுதிகளில் ஊரடங்கை உடனடியாகத் தளர்த்தக் கூடாது. இவ்விவகாரத்தில் எச்சரிக்கையோடு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பழி போடுவதை நிறுத்துங்கள் - முதலமைச்சரை சாடிய ஸ்டாலின்