சென்னை தாம்பரத்தில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இந்திய மருத்துவ சங்கத்தின் தாம்பரம் நகரத் தலைவர் மருத்துவர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ஜெயலால் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அகில இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் கடந்த 1ஆம் தேதிமுதல் 14ஆம் தேதிவரை 50 இடங்களில், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்தப் புதிய திட்டத்தின் மூலம் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு, 58 வகையான நவீன அறுவைச் சிகிச்சைகளுக்குரிய ஒரு வருட பயிற்சியை அளித்து, அறுவை சிகிச்சைகளுக்குரிய அனுமதியையும் வழங்கியுள்ளது. இது மக்களின் உயிருக்கு மாபெரும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.ஐஎம்ஏ தேசியத் தலைவர் ஜெயலால் தாம்பரத்தில் பேட்டி ஒரே நாடு, ஒரே மொழி ஒரே கலாசாரம் என்ற போர்வையில் ஒரே மருத்துவம் என்ற கொள்கையை வகுத்தது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக இதனைத் திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசு இதைத் திரும்பப் பெறவில்லை என்றால் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் அடுத்தகட்ட போராட்டங்களில் மருத்துவர்கள் ஈடுபடுவர்கள்.