சென்னை: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தைக் குறைத்த தமிழ்நாடு அரசிற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரசாணை வெளிவரக் காரணமாக இருந்த முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அத்துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றிகள்.
இந்த வெற்றியைப் பெறும்வரை உறுதியுடன் போராடிய ராஜா முத்தையா மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் மாணாக்கருக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தையும் உடனடியாகத் தமிழ்நாடு அரசு குறைத்திட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.