ETV Bharat / city

இஸ்லாமிய அமைப்பினர் மீது தடியடி - மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராடியவர்கள் மீது காவல் துறை நடத்தியத் தாக்குதலுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

union
union
author img

By

Published : Feb 15, 2020, 3:42 PM IST

இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முஸ்லீம்களுக்கு குடியுரிமையை மறுக்கும் வகையிலும், குடியுரிமை அற்றவர்களாக அவர்களை மாற்றும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகளும், முஸ்லீம் அமைப்புகள் உள்ளிட்ட சிறுபான்மை அமைப்புகளும், போராடி வருகின்றன.

நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் தன்னெழுச்சியாக இச்சட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, முஸ்லீம் அமைப்புகள் சார்பாக, சென்னை தண்டையார் பேட்டையில் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டம் நடந்து வருகிறது.

இதில் 500க்கும் மேற்பட்ட பெண்களும் பங்கேற்று வருகின்றனர். இப்போராட்டங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுபவையாகும். தண்டையார் பேட்டையில் போராடியவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சட்டப்பேரவையில் உடனடியாக, தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.