ETV Bharat / city

மருத்துவர் டூ உளவுத்துறை ஐஜி -  செந்தில்வேலன் கடந்து வந்த பாதை - செந்தில்வேலன்

தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறை ஐஜியாக டாக்டர் செந்தில்வேலனை அரசு நியமித்து அறிவித்துள்ளது. செந்தில் வேலன் குறித்த தொகுப்பை காணலாம்.

மருத்துவர் டூ உளவுத்துறை ஐஜி - உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் கடந்து வந்த பாதை

author img

By

Published : Jul 21, 2022, 12:39 PM IST

Updated : Jul 21, 2022, 12:46 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உளவுத்துறை சரியாக கையாள தவறியதால் கலவரமாக வெடித்ததாக சர்ச்சை கிளம்பி வந்த நிலையில் உளத்துறை ஐஜி மாற்றப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறை ஐஜியாக டாக்டர் செந்தில்வேலனை அரசு நியமித்து அறிவித்துள்ளது.

யார் இந்த செந்தில்வேலன்?: 2004 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி செந்தில்வேலன். மதுரையை சொந்த ஊராக கொண்ட செந்தில் வேலன், எம்பிபிஎஸ் படித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற இவர், 2004 ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் 84வது இடத்தைப் பிடித்தார். நேஷனல் போலீஸ் அகாடமியில் பட்டம் பெற்றார்.

மேலும் பயிற்சியின் போது செந்தில்வேலன் "சிறந்த ஒட்டுமொத்த தகுதிக்காக" அங்கீகரிக்கப்பட்டு, பிரதமரின் ’பேட்டன்’ மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ’ரிவால்வர்’ விருது பெற்றார். பேட்டன் மற்றும் ரிவால்வர் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க கவுரவமாகும்.

எம்பிபிஎஸ் டூ ஐபிஎஸ்: இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி உள்ளார். தந்தை விருப்பத்திற்காக மருத்துவரானார் ஆனால், செந்தில்வேலனுக்கு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்றே ஆசை. அதனால் மருத்துவராக பணியாற்றி கொண்டே இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதில் அவருக்கு ஐஏஎஸ் வாய்ப்பு கிடைத்தும் ஐபிஎஸையே தேர்வு செய்தார்.

தமிழ்நாடு காவல்துறை ஐபிஎஸ் கேடராக தேர்வானார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முதன் முதலில் ஏஎஸ்பியாக பணி அமர்த்தப்பட்டார். அங்கு கலவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டார்.

மேலும் காவலர்கள் உயிரிழந்துவிட்டால் சக காவலர்களிடம் நிதி வசூல் செய்து அதை இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கும் முறையை கொண்டு வந்தவர் செந்தில். இதன் பிறகு சிதம்பரம் ஏஎஸ்பியாக மாற்றப்பட்டார். அங்கு பல்கலைக்கழகம் மாணவர்கள் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்ததும், சிதம்பரம் கோவில் பிரச்சனைகளை சுமூக தீர்வு கண்டதாக பாராட்டை பெற்றார்.

பின்னர், எஸ்பியாக பதவி உயர்வு பெற்று தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு சென்றார் செந்தில் வேலன். அங்கு ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கைகள், திருட்டு வழக்குகளை விரைந்து துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்வது போன்ற செயல்கள் பாராட்டை பெற்றது. மேலும் இரவு நேர ரோந்து பணி கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தீவிர பணிகளை மேற்கொண்டார்.

மீண்டும் தமிழ்நாடு காவல்துறை: 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டார். தேர்தல் முடித்த பிறகு அதிமுக ஆட்சி வந்ததும் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டார். 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பரமக்குடி கலவரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் இறந்தனர், எஸ்பியாக இருந்த செந்தில்வேலன் காயமடைந்தார்.

நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் பிறகு செந்தில்வேலன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் எஸ்பியாக மாற்றப்பட்டார். மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பான முக்கிய வழக்கை விசாரித்து அது தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினார்.

இதையடுத்து செந்தில்வேலன் மத்திய அரசு பணிக்கு (அயல் பணி) சென்று விட்டார், எஸ்பியாக அங்கு சென்றார். கடந்த 2018-ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அங்கேயே பணியை தொடர்ந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் ஐஜியாக பதவி உயர்வு பெற்ற செந்தில் வேலன் தற்போது மீண்டும் உளவுத்துறை ஐஜியாக தமிழ்நாடு காவல்துறைக்கே வந்துள்ளார்.

இதையும் படிங்க: உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் இடமாற்றம்; புதிய உளவுத்துறை ஐஜியாக செந்தில்வேலன் நியமனம்!

Last Updated : Jul 21, 2022, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.