சென்னை: அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் (39). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று (நவ.28) அதிகாலை தனது வீட்டில் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தன் இடது பக்க தோள்பட்டையில் சுட்டுக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்த உறவினர்கள் செந்திலை மீட்டு சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குடிபோதையில் தவறுதலாக துப்பாக்கிச்சூடு
இது குறித்து தகவலறிந்து சாஸ்திரிநகர் காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளும்போது செந்தில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
![செந்தில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-suicideattemptbyshotgun-photo-script-7208368_28112021130848_2811f_1638085128_84.jpg)
தொடர்ந்து அவரிடமிருந்த துப்பாக்கியை காவல் துறையினர் கைப்பற்றிய நிலையில், உரிமம் பெற்று தான் துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், அது ரிவால்வர் ரகத்தைச் சேர்ந்தது என்றும் செந்தில் தெரிவித்துள்ளனர். துப்பாக்கியை கையாண்டபோது தவறுதலாக தன் கையில் சுட்டுக் கொண்டதாகவும் செந்தில் வாக்குமூலம் அளித்ததாக சாஸ்திரி நகர் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ரைசாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் கணவர்
செந்திலின் மனைவி பைரவி டாக்டர். ஆழ்வார்பேட்டையில் கிளினிக் நடத்தி வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. செந்திலின் மனைவி தான், நடிகை ரைசா வில்சனுக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர். இவருக்கு நேற்று (நவ.27) தான் வளைகாப்பு நடந்துள்ளது.
நிகழ்ச்சி முடிந்து இவர்களது உறவினர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர். அப்போது தான் செந்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் செந்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
![ரைசாவின் குற்றச்சாட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-gunblast-script-7202290_28112021133458_2811f_1638086698_482.jpg)
தோல் மருத்துவரான பைரவி தன்னுடைய முகத்திற்கு தவறான சிகிச்சை அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளங்களில் நடிகை ரைசா வில்சன் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்குப்பதிவு
இந்நிலையில், லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும் தவறாக துப்பாக்கியை கையாண்டு அஜாக்கிரதையாக செயல்பட்டதால் செந்தில் மீது சாஸ்திரி நகர் காவலர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
![செந்திலிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-gunblast-script-7202290_28112021133458_2811f_1638086698_742.jpg)
செந்திலின் மனைவி பைரவி மீது சமீபத்தில் நடிகை ரைசா வில்சன் புகார் ஒன்றை சமூக வலைதளங்களில் முன்வைத்து இருந்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது