ETV Bharat / city

கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டாம்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணி துறை அலுவலர்கள் கோரிக்கை - வட கிழக்கு பருவ மழை

சென்னை: கிருஷ்ணா நதியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்துமாறு ஆந்திர மாநில நீர்பாசன அலுவலர்களிடம் தமிழ்நாடு பொதுப்பணி துறை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

krishna-river
krishna-river
author img

By

Published : Jan 15, 2021, 8:00 PM IST

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை பெய்து வருவதால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி ஏரி, அதன் கொள்ளளவான 140 அடியை எட்டியது. இதனிடையே, ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் 1000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பூண்டி ஏரியின் உபரி நீரை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், அனைத்து ஏரிகளும் அதன் கொள்ளளவை எட்டியதால், ஆந்திராவின் நீர் பாசன அலுவலர்களை தொடர்பு கொண்ட தமிழ்நாடு பொதுப்பணி துறை அலுவலர்கள், கிருஷ்ணா நதியில் இருந்து திறந்து விடப்படும் நீரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய செயற்பொறியாளர் (கிருஷ்ணா நதி நீர், பூண்டி ஏரி), ஜார்ஜ், ஆந்திர அணையிலுருந்து கிருஷ்ணா நதியின் உபரி நீர் கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது என்றார். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஆந்திர அலுவலர்களை தொர்பு கொண்டு கிருஷ்ணா நதி நீரை நிறுத்துமாறு வலியுறுத்தியதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 675 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாகவும், அணையிலிருந்து 675 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனதின் முன்னாள் முனைவர் ஜனகராஜன், சென்னை பெருநகரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகள் இருப்பதாகவும், இந்த ஏரிகள் பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பயன்படாத வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பேசிய பொதுப்பணி துறை அலுவலர் ஒருவர், நீர் நிலைகளை சிறைந்த முறையில் பராமரிக்க தமிழ்நாடு அரசு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்றும் குறைந்த அளவில் நிதி ஒதுக்குவதால் பணிகள் முழுமையாக முடிக்கப்பட இயலாது என்றும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.