ETV Bharat / city

மக்களிடம் வாக்கு கேட்க அதிமுகவிற்கு உரிமை இல்லை - கனிமொழி ஆவேசம் - குடியுரிமைச் சட்டம்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரித்ததன் மூலம் மக்களிடம் சென்று வாக்கு கேட்க இனி அதிமுகவினருக்கு உரிமையில்லை என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

protest
protest
author img

By

Published : Dec 17, 2019, 4:43 PM IST

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மகளிரணி சார்பில், மகளிர் அணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேகர்பாபு , ரங்கநாதன் மற்றும் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய கனிமொழி, “குடியுரிமை சட்டத்திருத்தம் மக்களுக்கு, சமத்துவத்திற்கு எதிரானது. நாம் எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிரானது.

ஈழத்தமிழர்கள் இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவிற்கு தமிழர்கள் என்றாலே பிடிக்காது. அவர்களால் தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாது. வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, பண மதிப்பிழப்பு இவைகளிலிருந்து மக்களை திசைத் திருப்பவே அடுக்கடுக்கான சட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.

கனிமொழி, மகளிரணிச் செயலாளர், திமுக

நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இச்சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது மத்திய அரசு காவல் துறையை ஏவி ஆண், பெண் என்று பாராமல் மாட்டை அடிப்பதுபோல் தாக்கியுள்ளனர். இதை சகித்துக் கொண்டிருக்கக் கூடிய சூழலிற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அதிமுக இந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் இன்றைக்கு இந்தச் சட்டம் வந்திருக்காது. ஆனால், அவர்கள் மக்கள் நலனில் அக்கறையில்லாமல் அதனை ஆதரித்து வாக்களித்தனர்.

அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவைக்கு வருவதேயில்லை. ஆனால், இந்த சட்டத்திற்காக ஒரு நாள் மட்டும் வந்து ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தமிழ்நாடு மக்களுக்கு பாமக செய்யும் துரோகம் இல்லையா.

நாட்டையே பற்றி எரிய வைக்கக்கூடிய இந்த மசோதாவை வெற்றிபெறச் செய்ய கைக்கூலியாக செயல்பட்டவர்கள் அதிமுகவினர். இனிமேல் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மக்களிடம் சென்று கேட்க அவர்களுக்கு உரிமை கிடையாது“ என்றார்.

கனிமொழி, மகளிரணிச் செயலாளர், திமுக

இதையும் படிங்க: CAA Protest: அமித் ஷா உருவ பொம்மை எரிப்பு! ஒன்று திரண்ட மத்திய பல்கலைக்கழக மாணவர்கள்!

Intro:கொடி இருமை சட்ட திருத்த மசோதாவை வெற்றி பெற செய்ய பாஜகவினருக்கு கைக்கூலியாக செயல்பட்டவர்கள் அதிமுகவினர் என்று கனிமொழி கூறினார்

Body:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்

அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மகளிரணி சார்பில் மகளிர் அணி செயலாளர் மற்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு ,ரங்கநாதன் மற்றும் நாஞ்சில் சம்பத் கட்சித் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

நாடாளுமன்றத்தில் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வந்த போது அதை எதிர்த்து உறுதியோடு நின்று அவர் திமுக தலைவர் ஸ்டாலின்

இந்த சட்டம் மக்களுக்கு எதிரானது சமத்துவத்துக்கு எதிரானது சகோதரர்களுக்கு எதிரானது எல்லோரும் சமம் என்று சொல்லக்கூடிய வாக்குறுதிக்கு எதிரானது இந்த சட்டம்

பாஜகவினருக்கு தமிழர்கள் என்றாலே பிடிக்காது அவர்கள் தமிழகத்தில் காலூன்ற முடியாது அதனால்தான் இங்கே இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளை வேலையில்லாத் திண்டாட்டம் பொருளாதார வீழ்ச்சி மக்கள் படக் கூடிய பிரச்சினைகள் பணமதிப்பிழப்பு இதில் இருந்து மக்களை திசை திருப்பவே அடுக்கடுக்கான சட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கிறது என்றால் இதைவிட கேவலம் வேறு எங்கும் இல்லை

இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து இந்த நாடே பற்றி எறியக் கூடிய ஒரு நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்

நேற்று முன்தினம் மாணவர்கள் போராடி இருக்கிறார்கள் என்று கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போராடிய அந்த நேரத்தில் அங்கே அரசாங்கம் காவல்துறையை மாணவர்கள் மீது ஏவப்பட்டு எப்படி நடத்தப் பட்டார்கள் என்று நாம் அத்தனை பேருக்கும் தெரியும் செய்திகள் வாயிலாக அவர்கள் எப்படி தாக்கப் பட்டார்கள் என்பதை நாம் பார்த்தோம் ஆண் பெண் என்று பாராமல் மாட்டை தாக்கியதுபோல் தாக்கியுள்ளனர் இதை சகித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்

நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது ஆனால் நாம் வாக்கு செலுத்தி நாடாளுமன்றத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்து இருந்தால் இன்றைக்கு இந்த சட்டம் வந்து இருக்காது ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை மாறாக அதற்கு ஆதரித்து வாக்களித்து உள்ளனர் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்தார் கனிமொழி

அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவைக்கு வருவதில்லை ஆனால் அந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒரு நாள் மட்டும் வந்து ஆதரவு தெரிவித்திருக்கிறார் இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா என்று நான் கேட்கிறேன்

இந்த நாட்டையே பற்றி எரிய வைக்கக்கூடிய இந்த மசோதாவை வெற்றிபெற செய்ய கைக்கூலியாக செயல்பட்டவர்கள் அதிமுகவினர் இனிமேல் அவர்கள் இந்த நாட்டில் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கக்கூட உரிமை கூட கிடையாது என்று திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக உரையாற்றினார்

Conclusion:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.