மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மற்றும் மணவாளநகர் பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் ஆகியோர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.