ETV Bharat / city

’மாநில உரிமைகளை மத்திய அரசின் காலடியில் வைத்துவிட்டு என்னை விமர்சிப்பதா’ - ஓபிஎஸ்சுக்கு ஸ்டாலின் கண்டனம்! - ஸ்டாலின்

சென்னை: கரோனா நோய்த் தொற்று காலத்தில், எங்கோ இத்தனை நாளும் மறைந்திருந்துவிட்டு அறிக்கை மூலம் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் என்னை விமர்சிப்பதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ops
ops
author img

By

Published : Apr 25, 2020, 7:21 PM IST

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய பாஜக மீது கொண்ட பற்றாலும், 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்தை மறைப்பதற்காகவும், என்னை மனம் போன போக்கில் விமர்சனம் செய்துள்ளார்.

14 மாநிலங்களுக்கும் ஒதுக்கிட பரிந்துரைத்த வருவாய் பற்றாக்குறை மானியத்தை, மத்திய அரசே இன்னும் முழுமையாக ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி விட்டு, இப்போது, ’முதன்முதலில் வருவாய் பற்றாக்குறை மானியத்தைப் பெற்றோம். முதல் தவணையையும் பெற்று விட்டோம்’ என்று, சிறிதும் நாணமின்றிப் பின் வாங்குவது ஏன்? மத்திய அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சி செய்வது ஏன்?

’மத்திய அரசு பங்கேற்கும் திட்டங்களில், தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது’ என்றும், ’தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்யவே சிறப்பு உதவி மானியம் வழங்க தனிப்பட்ட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்கிறோம்’ என்றும் காரசாரமாக பேசிவிட்டு இன்றைக்கு, முதலமைச்சரின் முயற்சியால் நிதிப் பகிர்வு அதிகம் கிடைத்தது என்று அரண் அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்?

நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் நிர்ப்பந்தமா, அல்லது மகனை எப்படியாவது மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையா? 15ஆவது நிதிக்குழுவிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் உள்ள கோரிக்கைகள் என்ன? அந்தக் கோரிக்கைகளில் நிறைவேற்றப்பட்டது எத்தனை? அவற்றைத் தமிழக மக்களுக்கு வெளியிடத் தயாரா?

கரோனா நோய்த் தொற்று காலத்தில், எங்கோ இத்தனை நாளும் மறைந்திருந்துவிட்டு, இந்த அறிக்கை மூலம் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி - அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்றெல்லாம், அறிக்கை விட்டிருப்பதற்கு உள்ளபடியே வருந்துகிறேன்.

தமிழ்நாட்டின் உரிமைகளை ஓங்கிக் குரல் கொடுத்துக் காப்பாற்ற முன்வராவிட்டாலும், இப்படி அழைக்காமலே சென்று, உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்துக் கைபிசைந்து நிற்கும் காட்சி கண்டு, பரிதாபத்தால் மனம் கலங்குகிறேன் ” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’விரக்தியில் ஸ்டாலின்' - அமைச்சர் வேலுமணி பாய்ச்சல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.