ETV Bharat / city

'எல்லாம் சரியாகி வருகிறது' என்ற தோற்றத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முயற்சி - ஸ்டாலின் தாக்கு

சென்னை: கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழலில், 'எல்லாம் சரியாகி வருகிறது' என்ற தோற்றத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு நினைக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin
author img

By

Published : May 5, 2020, 12:38 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அச்சம் தருவதாகவும், அதிர்ச்சியை ஊட்டுவதாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது போலக் காட்டினாலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தினந்தோறும் செய்யப்படும் பரிசோதனைகளை மொத்த எண்ணிக்கையாக மட்டுமில்லாமல், மாவட்ட வாரியாக எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டது என்பதையும் அரசு விளக்கமாக வெளியிட வேண்டும். ஆரம்பத்தில் கரோனா தொற்று இல்லை என்று சொல்லப்பட்ட மாவட்டங்களில் இப்போது பரவி வருவதாக எண்ணிக்கைகள் காட்டுகின்றன என்றால், எப்படிப் பரவியது? அல்லது, பல மாவட்டங்களில் அப்போது பரிசோதனையே செய்யாமல் இப்போது செய்வதால் வெளியில் தெரிய வருகிறதா? என்பதையும் அரசு விளக்க வேண்டும்.

இன்றைக்கு 'கோயம்பேடு' மீது முழுப்பழியையும் போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 25 அன்று பல்லாயிரக்கணக்கில் கூடியதும், தினமும் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மொத்த மற்றும் சிறுவியாபாரிகளை தனிமனித இடைவெளி இல்லாமல் கூட விட்டதும்தான் அரசாங்கம் செயல்படும் அழகா? சென்னை மாநகரத்தில் காவல்துறை ஆணையரகம் இருக்கிறதா? அல்லது அதுவும் மூடி சீல் வைக்கப்பட்டு விட்டதா?

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் அரசு இதுவரை செய்யாததால், மக்கள் வெளியில் வருகிறார்கள். இத்தகைய சூழலில் ஊரடங்கில் தளர்வுகள் செய்து, 'எல்லாம் சரியாகி வருகிறது' என்ற தோற்றத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு நினைக்கிறது. ஆனால், கரோனா கட்டுக்குள் வரவில்லை என்பதையே நேற்றைய எண்ணிக்கை காட்டுகிறது. அரசின் தளர்வு, இந்த எண்ணிக்கையை அதிகரிக்கக் காரணமாகி விடக்கூடாது ” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில் - கே.எஸ். அழகிரி கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.