ETV Bharat / city

தேர்தல் பரப்புரையை தொடங்கிய திமுக!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பரப்புரை பட்டியலை திமுக அறிவித்துள்ளது. அதன்படி மு.க.ஸ்டாலின் காஞ்சியிலும், கனிமொழி எடப்பாடியிலும் தங்கள் பரப்புரையை தொடங்கவுள்ளனர்.

author img

By

Published : Nov 20, 2020, 3:26 PM IST

Updated : Nov 20, 2020, 4:13 PM IST

election
election

அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதையொட்டி திமுக முழுவீச்சில் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் அடுத்த பத்து நாட்களுக்கான பரப்புரை பட்டியலை அக்கட்சி அறிவித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திலும், மகளிரணி செயலாளர் கனிமொழி எடப்பாடியிலும், 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கவுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையை, கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இன்று தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் கனிமொழி வரும் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளார். அதேபோல், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, பேரா.சபாபதி மோகன் ஆகியோரும் தேர்தல் பரப்புரையை தொடங்க இருக்கின்றனர்.

டிசம்பர் 2 முதல் துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் ராஜ கண்ணப்பன் ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், செந்தில்குமார், பார்த்திபன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் கார்த்திகேயே சிவசேனாபதி ஆகியோர் டிசம்பர் 11 முதல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பாக அன்பகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, " 234 தொகுதிகளிலும் 10 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து, 75 நாட்கள், 15 உயர்நிலை தலைவர்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 கூட்டங்களில் பேச உள்ளனர். பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மூத்தத் தலைவர்களுக்கு தேர்தல் தொடர்பான மற்ற பணிகள் இருப்பதால், இளைஞர்களை அதிகளவில் பயன்படுத்துகிறோம்.

தேர்தல் பரப்புரையை தொடங்கிய திமுக!

பரப்புரையின் முக்கிய நோக்கமாக, கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசின் ஊழல்களையும், நிர்வாகத் திறமையின்மையையும், மக்கள் பட்ட துயரங்களையும் எடுத்துச் சொல்ல உள்ளோம். திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் மக்களின் கருத்துகளையும், அறிவுரைகளையும் கேட்டு செயல்படுத்த உள்ளோம் " என்றார்.

தலைவர்கள் பரப்புரையில் ஈடுபடும் தேதி, இடம் குறித்து முழு பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. அதன்பின்னரே, ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களின் விவரங்கள் தெரியவரும்.

இதையும் படிங்க: சென்னையில் ஓய்வெடுக்கிறார் சோனியா காந்தி?

Last Updated : Nov 20, 2020, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.