வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தமிழ்நாட்டிலும் விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும், அதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஆதரிக்கும் வகையிலும், மாநிலம் முழுவதும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: ஹரியானாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலம் வந்த மாப்பிள்ளை!