ETV Bharat / city

'எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார்' - ஆர்.எஸ். பாரதி புகார்

author img

By

Published : Feb 10, 2021, 9:01 PM IST

ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயாராக இருப்பதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாராதி தெரிவித்துள்ளார்.

dmk organizing secretary rs bharathi
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தலைமையிலான குழுவினர், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இன்று(பிப்.10) ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "திமுக சார்பில் தமிழ்நாடு தேர்தல் அலுவலரிடம் ஏற்கனவே 6 மனுக்கள் அளித்துள்ளோம். இதுவரை அதற்கு எந்த பதிலும் வரவில்லை. ஆனால், அதிமுகவின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதில் வருகிறது. இது ஒரு தலைபட்சமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினோம். அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக திமுகவின் மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுக்கு உத்தரவிட்டார்.

சென்னை சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதவரம் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு எந்தவித பாதுகாப்புமின்றி உள்ளது. கதவுகள் உடைந்து, கட்டடமும் சேதமடைந்து உள்ளது. எனவே அவற்றை வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் கூறினோம். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

தற்போது வரை வாக்காளர் பட்டியல் முழுமையாக தயார் செய்யப்படவில்லை. குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில், காவலர்கள் குடியிருப்பு முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வசித்த 581 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அவர்களின் வாக்குகள் முறைகேடாக பயன்படுத்தப்படக் கூடும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

இந்திய தேர்தல் ஆணையருடான ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் ஆர். எஸ். பாரதி பேச்சு

அதிமுக அரசு பணத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், சட்டப்பிரிவினருடன் இணைந்து திமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.

அமைச்சர் வேலுமணியின் தொகுதி தொண்டாமுத்தூர் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அவர் தொகுதிகுட்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளை சிங்காநல்லூர் பகுதியில் வைத்துள்ளனர். அதில் உள்நோக்கம் உள்ளதாக தெரிகிறது. இதுபற்றி புகார் அளித்தும் எந்த பதிலும் வரவில்லை. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திமுகவுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே முடிவெடுத்துள்ளனர். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனைச் சந்திக்க திமுக தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புகாரை படிக்க தெரியாத ஸ்டாலின், குறைகளை எப்படி தீர்ப்பார்? எடப்பாடி பழனிசாமி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.