ETV Bharat / city

எத்தனை சிசிடிவி கேமராக்கள்? கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் - cctv cameras

நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்தில் இதுவரை எத்தனை ரயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

DMK MP P Wilson tweet
DMK MP P Wilson tweet
author img

By

Published : Aug 6, 2021, 10:50 PM IST

சென்னை: நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வகுக்கப்பட்ட திட்டத்தில், இதுவரை எத்தனை ரயில் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. விலசன் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இந்த திட்டம் இதுவரையில் எத்தனை ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பி. வில்சன், "அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவும் திட்டத்திற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 95 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • For the Project to install CCTV cameras in all Rly stations ,₹ 500 cr has been allocated and ₹ 295 cr has been released;(₹ 95 cr- utilized ₹ 200 cr -will be used CFY).
    In TN,total 111 stations will have CCTV Cameras- 23 stations so far installed replies Hon’ble Minister. pic.twitter.com/XZcX21KLBl

    — P. Wilson MP (@PWilsonDMK) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2021ஆம் ஆண்டில் 200 கோடி ரூபாய் பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக உள்ள 111 ரயில் நிலையங்களில் 23 ரயில் நிலையங்களில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஸ்வாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து தொடரப்பட்ட வழக்குகள் மூலமாக ரயில் நிலையங்களின் சிசிடிவி கேமரா கட்டாயம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது,

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.