ETV Bharat / city

'திமுகவில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறியுள்ளது' - கு.க. செல்வம்

சென்னை: திமுகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்றும், அக்கட்சியில் வாரிசு அரசியல் போய் தற்போது குடும்ப அரசியல் வந்துவிட்டதாகவும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

mla
mla
author img

By

Published : Aug 5, 2020, 6:32 PM IST

திமுக தலைமை நிலையச் செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கு.க. செல்வம் நேற்று திடீரென டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை, மாநில பாஜக தலைவர் முருகனுடன் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார். மேலும், மோடி அரசை விமர்சிக்கும் காங்கிரசுடன் திமுக உறவை முறித்துக்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, கு.க. செல்வத்தின் கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்து, திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கு.க. செல்வத்தை, பாஜகவினர் காவித் துண்டு அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து நேராக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்திற்கு அவர் சென்றார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ராமர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய செல்வம், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “திமுகவிலிருந்து என்னை நீக்கினாலும் கவலையில்லை. சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்க கட்சித் தலைமையிடம் கேட்டும் பதவி கொடுக்கவில்லை. அங்கு வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறியுள்ளது. திமுக தலைவர் உடனடியாக உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும். 55 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்சியில் இருக்க வேண்டாம் எனக் கட்சித் தலைமை நினைக்கிறது. மூத்த தலைவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை “ என்றார்.

தொடர்ந்து பேசிய மாநில துணைத் தலைவரும், அண்மையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவருமான வி.பி. துரைசாமி, ”திமுக தலைவர், அவரது மகன், மருமகன் ஆகியோர் மூத்த நிர்வாகிகளை மதிக்கவில்லை, ஒதுக்குகின்றனர். கு.க. செல்வம் இன்னும் பாஜகவில் சேரவில்லை; அவர் ஈர்க்கப்பட்டுள்ளார் “ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்.எல்.ஏ., மு.க. செல்வத்தை வரவேற்க குவிந்த பாஜக தொண்டர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.