ETV Bharat / city

திமுக தலைவர் ஸ்டாலினுடன் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் என்.ஆர்.  இளங்கோ சந்திப்பு - DMK candidates announce for Rajya Sabha elections

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், என்.ஆர். இளங்கோ அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின்-என்ஆர்  இளங்கோ சந்திப்பு

author img

By

Published : Mar 2, 2020, 1:57 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது அதிமுக, திமுகவுக்கு இருந்துவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், இரு கட்சிகளும் தலா மூன்று உறுப்பினர்களைத் தேர்வுசெய்து மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும்.

இதைத்தொடர்ந்து திமுகவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற கடும் போட்டி நிலவிவந்த நிலையில் நேற்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கூறினார்.

இந்த அறிவிப்பையொட்டி, இன்று என்.ஆர். இளங்கோ திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். இந்தச் சந்திப்பில் துரைமுருகன், ஐ. பெரியசாமி, ஏ.வ. வேலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க; ‘வேளாண் மண்டலத்தைத் தொடர்ந்து பெட்ரோலிய மண்டலம்’ - முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.