கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படையும் ஏழை எளியோருக்கு திமுக சார்பாக ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் அடிப்படை உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ‘ஒன்றிணைவோம் வா’ மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து வேலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது, கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கிடைத்த உதவிகள், அப்பகுதியில் கரோனா நோயின் தாக்கம் குறித்து கேட்டறிந்தார்.