ETV Bharat / city

'ஆசிரியர் ராஜகோபாலன் ஆர்.எஸ். பாரதியின் உறவினர்' - பரவி வரும் செய்தி குறித்து புகார் - case against teacher Rajagopalan

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன், திமுக அமைப்புச் செயலாளரின் உறவினர் என பொய்யான தகவலை பரப்பி வரக்கூடிய நபர் மீது திமுக வழக்கறிஞர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

'ஆசிரியர் ராஜகோபலன் ஆர் எஸ் பாரதியின் உறவினர்' - பரவி வரும் செய்தி குறித்து புகார்

author img

By

Published : May 26, 2021, 6:00 PM IST

Updated : May 26, 2021, 8:03 PM IST

சென்னை, பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைனில் வகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது விஸ்பரூபமெடுத்து நிலையில் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கிடையில் பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராஜகோபாலன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் நெருங்கிய உறவினர் எனவும் இந்த வழக்கை உடனடியாக மூடி மறைத்துவிடுவார்கள் என்றும் சமூக வலைதளங்களில் நாராயணன் சாஸ்திரி என்பவர் பதிவிட்ட பதிவு வேகமாக பரவி வைரலாகிவருகிறது.

திமுக வழக்கறிஞர் புகார்
திமுக வழக்கறிஞர் புகார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, திமுகவின் பெயரை கெடுக்கும் நோக்கில் பொய்யான தகவலை பரப்பி வரக்கூடிய நாராயணன் சேஷாத்ரி, அந்த பதிவை ஷேர் செய்து வரக்கூடிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க; பத்மசேஷாத்ரி பாலியல் விவகாரம்: தீப்பொறியான இன்ஸ்டாகிராம் ஷேட்... அப்படி என்னதான் பேசியிருக்கிறார்கள்?

Last Updated : May 26, 2021, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.