ETV Bharat / city

’நாராயணசாமி ஆட்சி கலைந்ததற்கு திமுகதான் காரணம்’

சென்னை: புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கலைந்ததற்கு காரணமே திமுக தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

dinakaran
dinakaran
author img

By

Published : Feb 25, 2021, 1:19 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் சண்முகசாலையில் அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய தினகரன், “சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபோது நின்ற கூட்டத்தை பார்த்து எதிரிகள் நடுங்கிப்போயுள்ளனர். கரோனா காலத்தில் எந்த அரசு நிகழ்ச்சியும் நடக்காதபோது, ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டு செலவு செய்யப்பட்டிருப்பது குறித்து ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டும்.

’நாராயணசாமி ஆட்சி கலைந்ததற்கு திமுகதான் காரணம்’

எங்களது ஒரே நோக்கம் திமுக ஆட்சிக்கு வந்துவிடவோ, அதனை வரவிடவோ கூடாது என்பதுதான். புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது ஜனநாயகப் படுகொலை என விமர்சிப்பவர்கள், அங்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதவி விலகியது குறித்து பேசவேயில்லை. புதுவையில் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு காரணமே திமுக தான்.

நான் எதை பேசினாலும் என் மீது வழக்குப் போடுகிறார்கள். ஒருவேளை தப்பித் தவறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரையும் கைது செய்வார்கள். அவர்களை நாங்கள்தான் பிணையில் எடுக்க வேண்டும். தற்போதைய ஆட்சியாளர்கள் மீது எனக்கு தனிப்பட்ட கோவமும் எதுவுமில்லை. அவர்கள் எனக்கு எதிரியும் இல்லை” என்றார்.

இதையும் படிங்க: கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு 3 வாரங்களுக்கு தள்ளிவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.