ETV Bharat / city

'திமுக கோடீஸ்வர கட்சி, அதிமுக ஏழைகளுக்கான இயக்கம்' - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உண்மையை ஆராயாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து பேசுகிறார். திமுக போல் அதிமுக ஒன்றும் கோடீஸ்வர கட்சி அல்ல; அது ஏழைகளின் கட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

DMK is a Millionaire's Party, ADMK is a Poor People's Movement Says TN Minister Jayakumar
author img

By

Published : Nov 16, 2019, 11:21 AM IST

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அனுமதி கோரும் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வடசென்னை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுகவைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய பணக்கார கட்சி ஆகிவிட்டது. ஒரு மேயர் வேட்பாளருக்கு ரூ.50 ஆயிரம். அது கோடீஸ்வரர்களின் கட்சி. ஏழைகளின் கட்சி அல்ல. ஏழைகளுக்கான கட்சி என்றால் அது அதிமுக இயக்கம்தான்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்பதுபோல திமுக ஒரு மிரட்சியோடு இன்றைக்கு இருக்கிறது. அதனை நீங்கள் அவரின் ட்விட்டரில் கூட பார்க்கலாம். நிர்வாக ரீதியாக மாறுதல் என்பது சகஜம். பலம் இருந்தால் பயப்பட தேவையில்லை. நீச்சல் தெரிந்தவனுக்கு ஆழத்தை பற்றி கவலை இல்லை. அவன் தைரியமாக தண்ணீரில் குதிப்பான். நீந்துவான், கரைசேர்வான். அதுபோல்தான் அதிமுக. எவ்வளவு பெரிய சமுத்திரம் என்றாலும் நீந்தி கரையைக் கடந்துவிடும்.

ஆனால் நீந்த தெரியாமல், தத்தளித்து மூழ்கிப்போவதுதான் திமுக. அந்த மாதிரி மு.க. ஸ்டாலின் உள்ளார். ஒரு ஆணையரை மாற்றிவிட்டார்கள் என்று ட்வீட் செய்கிறார். அப்புறம் மாற்றுகிறார், ஆணையர் அல்ல செயலர் என்று. இதையெல்லாம் பார்க்கும்போது அவர் தனது மூளையை பயன்படுத்துவது இல்லை என்பது தெரிகிறது. யாரோ எழுதிக் கொடுக்கிறார்கள், இவர் ட்வீட் செய்கிறார். மற்றபடி தனது மூளையைக் கொண்டு ஆராய்வதெல்லாம் கிடையாது.

அடுத்த அறிக்கையில் காவல் துறையில் ரூ.350 கோடிக்கு ஊழல் நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுவும் இதேபோல்தான் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கை.

ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், முதலில் ஒரு தகவல் கிடைத்தால் அது உண்மையா என ஆராய வேண்டும். அதன் பின்னர் மக்களிடம் சொல்ல வேண்டும். யாரோ எழுதிக் கொடுப்பதைப் படித்துகூட பார்க்காமல் கையெழுத்து போட்டுவிட வேண்டியது.

இந்த ஒப்பந்தமே, ரூ.57 கோடிக்குதான் போடப்பட்டது. இதில் ரூ.350 கோடியெல்லாம் கிடையாது. இதனை முதலில் மு.க. ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

தமிழ்நாட்டில் வெற்றிடம் என்பதெல்லாம் கிடையாது. அதிமுக தொண்டர்கள், கட்சித் தலைவர்கள் அந்த இடத்தை நிரப்பிவிட்டார்கள். வெற்றிடம் ஒன்று இருந்திருந்தால், மக்கள் நோட்டாவுக்கு தானே வாக்களித்திருப்பார்கள். அவ்வாறு நடக்கவில்லை. மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: ‘ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் மீண்டும் அதிமுக ஆட்சிதான்’ - அமைச்சர் ஜெயக்குமார்

Intro:ஸ்டாலின் தனது அறிவை பயன்படுத்துவதே இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்

Body:உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமான பெறுவதற்கான நிகழ்ச்சி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக வடச்சென்னை தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம் ராயபுரம் எழும்பூர் திருவிக நகர் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்பமானவை மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் இடம் என்று பெற்றுக்கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்.

தலைமைக் கழக அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மன்ற தேர்தலுக்கான விருப்பமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் இருந்து இன்றைக்கு பல்வேறு பொறுப்புகளுக்கு தமிழ்நாடு முழுவதும் பெறப்படுகின்றன

திமுகவைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய பணக்காரர் கட்சியாக இருக்கிறது ஒரு மேயர் வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாய் என்று வாங்குகிறது இதன் மூலம் திமுக எந்த அளவுக்கு கோடீஸ்வரர் கட்சி என்பது தெரிய வருகிறது அதிமுக தான் ஏழைகளின் கட்சி திமுக என்பது கோடீஸ்வர கட்சி

ஆண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல திமுக என்று ஒரு மிரட்சியோடு இருக்கிறது ஒரு நிர்வாக ரீதியாக தேர்தல் அதிகாரிகள் மாறுதல் என்பது சகஜம் பலம் இருந்தால் தேர்தலை கண்டு பயமில்லை கடல் சமுத்திரத்தில் நீச்சல் தெரிந்த எனக்கு பயமில்லை அதுபோலதான் அதிமுக மக்கள் என்னும் கரையை நீந்தி சென்று விடும் ஆனால் திமுக நீந்தத் தெரியாமல் தத்தளித்து மூழ்கிவிடும்

டுவிட்டரில் ஆணையர் மாறுதல் என்று தவறாக குறிப்பிடுகிறார் அதன்பின்னர் செயலர் என்று மாற்றுகிறார் என்றால் அவர் தனது அறிவை பயன்படுத்துவது இல்லை யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே சொல்கிறார் என்று தெரிகிறது

இதேபோலத்தான் காவல்துறையிலும் 350 கோடி ரூபாய் ஊழல் என்று யாரோ எழுதிக் கொடுப்பதை அறிக்கையாக சொல்கிறார் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருக்கக் கூடியவர் உண்மையை ஆராய்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் அவர் யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே சொல்லக்கூடாது

உண்மை நிலை என்னவென்றால் 57 கோடியே 45 லட்சத்து தான் காவல்துறைக்கு டிஜிட்டல் மொபைல் ரேடியோ விற்க டெண்டர் விடப்பட்டது இதை முதலில் ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்

வெற்றிடம் இருந்தால் நோட்டாவிற்கு மக்கள் ஓட்டு போட்டிருப்பார்கள் வெற்றிடம் இல்லாததால்தான் நோட்டாவிற்கு போடாமல் இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர் ஆகவே தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை

Conclusion:ஸ்டாலின் தனது அறிவை பயன்படுத்துவதே இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.