சென்னை: பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய சி.வி.சண்முகம், "இந்தியாவில் போதைப்பொருள் தலைநகரமாக தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மி விவகாரம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
திமுக அரசு வந்து ஓராண்டு ஆகியும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாமல், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்து வரும் ஓபிஎஸ்க்கு திமுக அரசு உதவி வருகிறது.
எஸ்.பி.வேலுமணியை அச்சுறுத்தி அதிமுகவை முடக்கலாம் என திமுக அரசு நினைக்கிறது. ஓபிஎஸ் பின்னால் இருந்து திமுக செயல்படுகிறது. வரும் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும்" என கூறினார்.
இதையும் படிங்க: 'பழனி முருகன் கோயிலை மேம்படுத்த திட்டம்' - அமைச்சர் சக்கரபாணி