ETV Bharat / city

தூக்கி குப்பையில் போடுங்கள்! - துரைமுருகன் ஆவேசம்!

சென்னை: இடஒதுக்கீட்டு பிரிவினரை தகுதி இல்லாதவர்கள் என முத்திரை குத்த முயலும் மத்திய அரசின் செயல்பாடு நாட்டின் 80 சதவீத மக்களை அவமதிக்கும் செயல் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 16, 2020, 1:49 PM IST

duraimurugan
duraimurugan

ஐஐடி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்ற பரிந்துரை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், “ ஐஐடி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் நியமனங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும், ஐஐடி நிறுவனங்களை உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்க வேண்டும் என மத்திய கல்வியமைச்சகம் நியமித்துள்ள ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரை கடும் கண்டனத்திற்குரியது.

இடஒதுக்கீடு பிரிவில் வருவோர் அனைவருமே தகுதி இல்லாதவர்கள் என்று மோடியின் பாஜக அரசு கங்கணம் கட்டிக் கொண்டு முத்திரை குத்தி, நாட்டின் சமூகநீதி கட்டமைப்பையே சீர்குலைத்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்களுக்கு எல்லாம் தகுதி இல்லை என்ற ஒரு மனப்பான்மையில் மத்திய அரசே செயல்படுவது, நாட்டின் 80 சதவீத மக்களை அவமதிக்கும் செயலாகும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் இரவு பகலாக உழைத்து, தங்களின் பங்களிப்பை உலகமே வியக்கும் வண்ணம் அளித்து வருவதை, ஏனோ பாஜக மட்டும் உணர மறுக்கிறது. ஏற்கனவே ஐஐடிகளிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும் உள்ள 49.50 சதவீத இடஒதுக்கீட்டில் 10 சதவீதத்தைக் கூட நிரப்பாத மத்திய பாஜக அரசு, தற்போது இருக்கிற இடஒதுக்கீடு முறையையும் நீக்கிவிடத் துடிப்பது சமூகநீதியின் மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல். இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, ஐஐடி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்க வேண்டும் என்ற பரிந்துரையைத் தூக்கி குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, ஐஐடி கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீடு பொருந்தும் என்றும், உடனடியாக அவசரச் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும். ’நான் ஓபிசி’ என்று கூறிய பிரதமர், நாட்டின் சமூகநீதி கட்டமைப்பை குழப்பவாதிகளிடமிருந்து பாதுகாத்திட வேண்டும் ” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளின் வேலைவாய்ப்புரிமை: சிக்கலும், தீர்வும்! - சிறப்புத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.