ETV Bharat / city

கூடுதல் ரேஷன் அரிசி வழங்கியதில் முறைகேடு புகார்: முதலமைச்சர், அமைச்சருக்கு எதிராக திமுக முன்னாள் எம்எல்ஏ வழக்கு! - ரேஷன் அரிசி

சென்னை: கரோனா பொது முடக்கத்தின்போது, நியாய விலை கடைகளில்( ரேஷன் கடை) கூடுதல் அரிசி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகார் மீது முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதலை பெறக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ., சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

DMK Former Mla seeks action against cm and food minister

author img

By

Published : Dec 15, 2020, 6:45 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவால் பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ ரேசன் அரிசி கூடுதலாக வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய உணவு கழகம் மூலமாக அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

கூடுதல் அரிசி வழங்கியதில் தமிழ்நாட்டில் முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், மத்திய அரசு உத்தரவின்படி குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்குவதற்குப் பதில், குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் வழங்கியதாகவும், மீதமுள்ள அரிசி அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மூலம் நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளனர்.

மேலும், மாநிலத்தில் 80 சதவீத குடும்பங்கள் அந்த அரிசியையும் பெறவில்லை என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், 90 சதவீதத்திற்கு மேலானோருக்கு அரிசி வழங்கப்பட்டுவிட்டதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் பெற்ற ரேசன் அரிசியை பொது மக்களுக்கு வழங்காமல் முறைகேடாக விற்ற விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி மீதும், அமைச்சர் காமராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை இயக்குனரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புகாரில் போதிய முகாந்திரம் உள்ளதால் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுனரின் ஒப்புதலைப் பெற லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.