ETV Bharat / city

தேர்தல் ஆணையரிடம் மீண்டும் மீண்டும் முறையிடும் திமுக - வாக்கு எண்ணிக்கை

சென்னை: வாக்கு எண்ணிக்கையில் நடக்கும் குளறுபடிகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையரிடம் திமுக நான்காவது முறையாக புகாரளித்துள்ளது.

complaint
complaint
author img

By

Published : Jan 3, 2020, 4:19 PM IST

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் நேற்று தொடங்கி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்,வாக்கு எண்ணிக்கையில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் இன்று காலை மாநிலத் தேர்தல் ஆணையரை சந்தித்து புகாரளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி, “ தேர்தல் ஆணையத்தில் நேற்றிலிருந்து தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் புகாரளித்துவருகிறோம். ஆனாலும் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகவே நடந்துகொள்கிறது. நேற்றிலிருந்து பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் நிறுத்தி வைத்தனர். நீதிமன்றத்தை நாங்கள் நாடிய பிறகுதான் சில இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இருந்தும், ராமநாதபுரம், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக பெற்ற வெற்றியை அலுவலர்களின் துணைக்கொண்டு மறைத்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் ஒருசார்பாக செயல்படுகிறது - திமுக

ஆகவே, நீதிமன்றத்திற்கு செல்லும் முன்பாக மீண்டும் மாநிலத் தேர்தல் ஆணையரை சந்தித்து, புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று இருமுறையும், இன்று காலை திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலுவும் மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு சதி!

Intro:

Body:tn_che_03_dmk_rs_bharathi_byte_visual_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.