விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சின்ன சேலத்தைச் சேர்ந்த மூர்த்தி (22) என்பவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு திமுக வட்டச் செயலாளர் கண்ணன் என்பவரின் மகன் கவித்ரன் (26) மருத்துவ தேவை என்று கூறி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.
இந்த பணத்தைத் திருப்பித் தராமல் கவித்ரன் வெகு நாட்களாக இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மூர்த்தி, கவித்ரன் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்காமல் தந்தையும், மகனும் மூர்த்தியை சராமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து மூர்த்தி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வட்டச் செயலாளர் கண்ணன், அவரது மகன் கவித்ரன் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: