ETV Bharat / city

கேரள பெருவெள்ளம் - திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் - torrential rains and floods

கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரணம்

author img

By

Published : Oct 18, 2021, 10:54 PM IST

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கிப் பலரும் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை, இழந்திருக்கிறார்கள். இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன.

பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், திமுக அறக்கட்டளைச் சார்பாக "கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயினை திமுக அறக்கட்டளைத் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (அக்.18) வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தெரிவிப்பதாக' இதுகுறித்தான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு 23ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.