ETV Bharat / city

'இனி திமுகவால் காஷ்மீரையும் வளைத்துப் போடமுடியும்!'

சென்னை: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்புத் தகுதியை ரத்து செய்ததன் மூலம் திமுகவால் அங்கும் சொத்துகளை வளைத்துப் போட முடியும் என்று அமைச்சர் ஜெயகுமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 7, 2019, 2:23 PM IST

அமைச்சர் ஜெயகுமார்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப் பணிகளை ஏற்கவுள்ள தமிழ்நாடு இளைஞர்களுக்கு அண்ணா மேலாண்மை மையத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன. மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தேர்வாகியுள்ள இளைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "1984ஆம் ஆண்டு மாநிலங்களவையில் ஜம்மு - காஷ்மீர் விவகாரம் வந்தபோது, காஷ்மீரை இந்தியா இறையாண்மைக்கு உட்பட்டுக் கொண்டுவர வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தினார். தற்போது அதனைத்தான் தற்போது பிரதமர் நிறைவேற்றி உள்ளார்" என்று பாராட்டு தெரிவித்தார்.

மேலும், "இதனால் திமுகவுக்கு லாபம்தான். எல்லா இடங்களிலும் சொத்து வாங்கியவர்களுக்குக் காஷ்மீரில் சொத்து வாங்க முடியாத நிலை இருந்தது. தற்போது அவர்களுக்குத்தான் இது சாதகமாக உள்ளது" என்றார்.

அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு பேசியது குறித்து கேட்டதற்கு, "வாதத்திற்கு வாதம் வைக்கலாமே தவிர முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றெல்லாம் கூறக் கூடாது. முதுகெலும்பைப் பற்றி திமுக பேச முடியாது. பல்வேறு விஷயங்களில் மாநில உரிமைகளைத் தாரைவார்த்தது திமுகதான். முதுகெலும்பு இருப்பதால்தான் அதிமுக அரசு தற்போது வரை நிமிர்ந்த நன்னடையோடு நன்றாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

Intro:Body:ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் அதை சார்ந்த குடிமை பணிகளை ஏற்கவுள்ள தமிழக இளைஞர்களுக்கு அண்ணா மேலாண்மை மையத்தில் பரிசுகள் வழங்கப்பட்டது. மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் தேர்வாகியுள்ள இளைஞர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "1984 ஆம் ஆண்டு ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் வந்தபோது அதை இந்தியா இறையாண்மைக்கு உட்பட்டு கொண்டுவர வேண்டும் என்று அம்மா வலியுறுத்தினார். தற்போது அதனை பாரத பிரதமர் தைரியத்தோடு நிறைவேற்றி உள்ளார். இதனால் தி.மு.க வுக்கு லாபம் தான். எல்லா இடங்களிலும் சொத்து வாங்கினார்கள். ஆனால் ஜம்மு காஷ்மீரில் வாங்க முடியாத நிலை இருந்தது. தற்போது அவர்களுக்கு தான் சாதகமாக உள்ளது. அரசியல் காரணத்துக்காக வேண்டுமானால் வெளி வேஷம் போட்டு அனைத்து கட்சி கூட்டம் கூட்டலாம்.

கடந்த கால வரைலாற்றை பார்த்தால் முல்லைப்பெரியாரை கேரளத்துக்கு தாரைவார்த்து கொடுத்தது, கச்சத்தீவை சிங்களர்களுக்கு தாரைவார்த்து கொடுத்தது, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகவுக்கு விட்டுக்கொடுத்தது என்று தமிழ்நாட்டின் நலனை பேணி காத்ததாக கூற அவர்களிடத்தில் எதுவுமில்லை. ஒரு பித்தலாட்ட அரசியலை தி.மு.க. முன்னேடுக்கிறது என்று மக்களுக்கு தெரியும்.

1947 இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் 1954 ஆம் ஆண்டு தான் 370 சரத்தை கொண்டுவர முடிந்தது. அதை ரத்து செய்ய காங்கிரஸ் ஆட்சியிலும் இரண்டு முறை முயன்றார்கள். எனவே பெரும்பாலான மக்கள் அதையே தான் விரும்புகிறார்கள் அதனால் மத்திய அரசு அதனை ரத்து செய்துள்ளது.

வாதத்திற்கு வாதம் வைக்கலாமே தவிர முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றெல்லாம் கூறக் கூடாது. முதுகெலும்பை பபற்றி தி.மு.க. பேச முடியாது. 1974 இல் சர்காரியா கமிஷனுக்கு பயந்து காவிரி உரிமையை விட்டுக்கொடுத்தார்கள், சிவப்பு கம்பளம் விரித்து கச்சத்தீவை தாரைவார்த்தார்காள், தி.மு.க. ஆட்சியிலிருந்த போது தான் காவிரியில் நிறைய அணைகள் கட்டப்பட்டது. இந்திரா காந்தி அம்மா பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள் என்று பயந்து முதுகெலும்பு இல்லாத கோழை தனமாக செயல்பட்டது தி.மு.க தான். அவர்கள் விட்டுக்கொடுத்த உரிமையை மீட்டெடுக்க வந்ததே அம்மாவின் ஆட்சி. முதுகெலும்பு இருப்பதால் தான் அண்ணா தி.மு.க அரசு தற்போது வரை ஒரு நிமிர்ந்த நன்னடையோடு நன்றாக இருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட இயக்கம் என்பது ஒரு மிகப்பெரிய இயக்கம். இதில் செயல்படுபவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகிறது. அற்காக செயல்படாதவர்களை நீக்கவில்லை. அவர்கள் செயல்பட்டால் நல்ல அங்கீகாரம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.