ETV Bharat / city

அரசை காப்பாற்றி கொள்ளவே உரிமை மீறல் நோட்டீஸ்! - திமுக வாதம்! - பேரவை உரிமைக்குழு

சென்னை: அதிமுக அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால்தான், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

gutkha case
gutkha case
author img

By

Published : Dec 2, 2020, 7:15 PM IST

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ-க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி அதனை ரத்து செய்தது.

இதையடுத்து உரிமைக்குழு இரண்டாவது முறையாக மீண்டும் கூடி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர், ” குட்கா பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ தான் தடை செய்யப்பட்டுள்ளது.

பேச்சுரிமை அடிப்படையில், குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட தான் பேரவைக்கு உறுப்பினர்கள் குட்காவை கொண்டு சென்றனர். நாடாளுமன்றம் எது உரிமை, உரிமை மீறல் என்பதை வரையறை செய்யவில்லை. முதல்வரை மாற்றக்கோரி 18 எம்.எல்.ஏ க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஒ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இப்படி தொடர்ச்சியாக அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால் தான், ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ-களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது ” என வாதிட்டனர்.

அடுத்ததாக சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, ” ஒரு சட்டமன்ற உறுப்பினர், சட்டத்தால் தடை செய்யப்பட்ட எதையும் அவைக்கு கொண்டு வரக்கூடாது. அதனால் குட்காவை பேச்சுரிமைக்காக தான் கொண்டு வந்தோம் எனக் கூறக்கூடாது. மேலும், உரிமைக்குழு முன்பு விளக்கமளிக்க வாய்ப்புள்ள நிலையில், நீதிமன்றத்தை உறுப்பினர்கள் நாடியிருக்க வேண்டிய அவசியமில்லை.

அடிப்படை உரிமை, பேச்சுரிமை நிபந்தனைக்கு உட்பட்டது. அவைக்கு என்று ஒரு மரபு உள்ளது. எல்லோரும் பேரவையில் இஷ்டம் போல் செயல்பட முடியாது. அவர்கள் முன் அனுமதி பெறாமல் குட்கா பொருட்களை கொண்டு வந்துள்ளனர். இந்த அரசுக்கு ஒருபோதும் பெரும்பான்மை குறைவு ஏற்பட்டதில்லை. எனவே அவையில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ளத்தான் உரிமை மீறல் பிரச்சனை கையில் எடுக்கப்பட்டது என கூறுவதில் அர்த்தமில்லை.

அவையின் செயல்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் உரிமை மீறல் எனக் கருதலாம். சட்டப்பேரவை நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது ” என வாதிட்டார். எனினும் சோமையாஜியின் வாதம் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோரிக்கைகளுக்காக களம்கண்ட மாற்றுத் திறனாளிகள் கைது: தமிழ்நாட்டில் வலுத்த போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.