தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்திவருகின்றன. தங்கள் பரப்புரையின் முக்கிய ஆயுதமாக தேர்தல் விளம்பரங்களைக் கையில் எடுத்துள்ள இரு கட்சிகளும் போஸ்டர்களாகவும், சமூக வலைதளப் புகைப்படங்களாகவும் அவற்றை பரப்பிவருகின்றன.
தங்கள் தேர்தல் அறிக்கைகளை காப்பி அடித்துவிட்டதாக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களைக் கூறிவரும் நிலையில், தற்போது இரு கட்சி போஸ்டர் விளம்பரத்திலும் ஒரே பெண்மணியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் தொலைநோக்குத் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அக்கட்சியின் ஐ.டி விங்க் அந்த அறிவிப்பை டிஜிட்டல் போஸ்டராக மாற்றி, புடவை அணிந்த பெண்ணை மாடலாக வைத்து வெளியிட்டது.
அடுத்த சில நாட்களில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட, அந்த அறிவிப்பின் போஸ்டரிலும் அதே பெண்ணின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது. இந்த விளம்பரப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவியநிலையில், தேர்தல் அறிக்கையை மட்டுமல்ல, நாங்கள் பயன்படுத்தும் புகைப்படங்களைக்கூட காப்பியடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை திமுக தரப்பு முன்வைத்தது.
இதற்கு மறுப்புத்தெரிவித்த அதிமுக நிர்வாகிகள், இந்தப் பெண்ணின் புகைப்படங்கள் ஏற்கெனவே ஜனவரி மாதத்தில் அரசு விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் திமுக காப்பியடித்துள்ளதாக பதில் குற்றச்சாட்டை முன்வைத்தது.
-
தலைவர் அறிவித்த
— இசை (@isai_) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்:
1. வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு#விடியலுக்கானமுழக்கம் 🖤❤️ pic.twitter.com/McTM0iMUfv
">தலைவர் அறிவித்த
— இசை (@isai_) March 7, 2021
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்:
1. வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு#விடியலுக்கானமுழக்கம் 🖤❤️ pic.twitter.com/McTM0iMUfvதலைவர் அறிவித்த
— இசை (@isai_) March 7, 2021
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்:
1. வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு#விடியலுக்கானமுழக்கம் 🖤❤️ pic.twitter.com/McTM0iMUfv
இரு தரப்பு மாறி மாறி புகார் தெரிவித்த நிலையில், இந்தப் புகைப்படங்கள் ஷட்டர்ஸ்டாக் என்ற புகைப்பட இணைதளத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த இணையதளத்தில் இந்தப் பெண்ணின் புகைப்படம் மாடல் போட்டோவாக இருந்துள்ளது.
இரு கட்சிகளும் ஒரே நபரின் போட்டோவைப் பயன்படுத்தியதை நெட்டிசன்கள், பார்த்திபன் வடிவேலு காமெடியில் வரும் "அதே டெய்லர்...அதே வாடகை..." என்ற வசனத்தை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
குடும்பத்தலைவிகள் ஏன் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் ? pic.twitter.com/dGpelGkApn
— AIADMK (@AIADMKOfficial) March 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">குடும்பத்தலைவிகள் ஏன் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் ? pic.twitter.com/dGpelGkApn
— AIADMK (@AIADMKOfficial) March 19, 2021குடும்பத்தலைவிகள் ஏன் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் ? pic.twitter.com/dGpelGkApn
— AIADMK (@AIADMKOfficial) March 19, 2021
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும், சினிமாவில் துணைக் கலைஞராக நடிக்கும் பாட்டியை தங்கள் வீடியோ விளம்பரத்தில் மாறி மாறி பயன்படுத்திக்கொண்டது விவாதத்தைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 217.35 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் - சத்யபிரத சாகு