ETV Bharat / city

முதலமைச்சர் தவறான ஒரு மயக்கத்தில் தன்முனைப்பில் பேசக்கூடாது - கி. வீரமணி

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன மருத்துவர்களா என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

veeramani
veeramani
author img

By

Published : Apr 18, 2020, 6:59 PM IST

சேலத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’எங்களுக்கு மக்கள் உயிர் தான் முக்கியம், எதிர்க்கட்சி சொல்வதையெல்லாம் கேட்க முடியாது என்று கூறினார். மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டம் எதற்காக கூட்டவேண்டும் என்றும், ஆலோசனை கூறுவதற்கு எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

முதலமைச்சரின் இந்த கருத்திற்கு திமுகவின் தோழமைக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, “முதலமைச்சருக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு. ஸ்டாலினுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று ஒரு முதலமைச்சர் பேசுவது ஜனநாயகப் பண்பல்ல. எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை உடனே ஏற்றால், அது ஆளுங்கட்சிக்குக் கவுரவக் குறைவு என்பதுபோல் தவறான ஒரு மயக்கத்தில் தன்முனைப்பில் பேசக்கூடாது.

முதலமைச்சர் தன் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் “ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், “ஜனநாயக அரசியல் அமைப்பில் எதிர்க்கட்சிகளும் உள்ளடங்கி இருப்பதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். அதிகார போதையில் அவர் ‘நிதானம் இழந்து பேசுவது’ முதலமைச்சர் என்ற மாண்பமைந்த பொறுப்புக்கு தீராக்களங்கம் ஏற்படுத்தும் செயலாகும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது எதிர்மறை அணுகுமுறையை உடனடியாக கைவிட வேண்டும்“ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ’மஞ்சள் துண்டு அணிந்த கட்சிக்கு காண்பதெல்லாம் மஞ்சள்’ - அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.