சென்னை:இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு, தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களும் தகுதியானவர்கள்," என்று தெரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’பெண் எம்பிக்கள் போகப்பொருள் அல்ல...’ - பொங்கிய ட்விட்டர்வாசிகள்... வருத்தம் தெரிவித்த சசி தரூர்