தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட 68 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில்,
1. கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தல்.
2. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கட்சி சார்பில் வேளாண் மசோதா குழுவை அமைத்தல்.
3. தமிழ்நாட்டில் இதுவரையில்லாத பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து, அதனை உடனடியாக குறைக்க வேண்டுதல்.
4. தமிழ்நாடு முழுவதும் ஆண்களுக்குப் பெண்கள் சமமாக மதுப்பழக்கத்தில் ஈடுபட்டுவருவதை, குறைக்க மதுபானக் கடைகளை மூடக் கோருதல்.
5. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை சீர் செய்யக் கோருதல்.
6. தமிழ்நாட்டிற்குப் பெருமைசேர்க்கும் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்குப் பாராட்டுத் தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: 'டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள்' - பிரேமலதா வலியுறுத்தல்!