தேமுதிகவின் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வந்த மதிவாணன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அப்போது திமுக சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிவாணன், " தேமுதிக தொடங்கப்பட்டதன் நோக்கத்திலிருந்து கட்சி திசை மாறியுள்ளது. அக்கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி கட்சித் தலைவர் விஜயகாந்திற்கே தெரிவதில்லை. மக்களின் தேவைக்காக கூட்டணி வைக்காமல் வெறும் 42 சீட்டுக்காக கூட்டணி வைக்கின்றனர். தேமுதிகவில் நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். விரைவில் அவர்களும் திமுகவில் இணைவார்கள் " எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’கரோனா வந்ததால் எய்ம்ஸ் வரவில்லை' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்