ETV Bharat / city

சட்டப்பேரவைத் தேர்தல் - தேமுதிகவின் தோல்விக்கு காரணம் என்ன? - vijayakanth

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. தேமுதிகவின் தோல்விக்கு காரணம் என்ன? அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வெளியேறியது தவறான முடிவா? திமுகவுடன் கூட்டணி வைக்காதது காரணமா? அல்லது அமமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது தவறா என்பது குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.

தேமுதிகவின் படுதோல்விக்கு காரணம் என்ன?
தேமுதிகவின் படுதோல்விக்கு காரணம் என்ன?
author img

By

Published : May 2, 2021, 5:48 PM IST

Updated : May 2, 2021, 5:54 PM IST

தேமுதிக முதல் தேர்தல்

கடந்த 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக முதல்முறையாக போட்டியிட்டது. அதிமுக, திமுக என இரு பிரதான கட்சிகளை எதிர்த்துப் பரப்புரை செய்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், தெய்வத்துடனும் மக்களுடனும்தான் கூட்டணி என கூறி தேர்தலைச் சந்தித்தார். எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்த விஜயகாந்திற்கு, பொதுமக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். அந்தத் தேர்தலில் சுமார் 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் விஜயகாந்த்.

எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த்

இதேபோல் 2009 மக்களவைத் தேர்தலிலும் தனியாகத் தேர்தலைச் சந்தித்த தேமுதிக, அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இரு தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய தேமுதிகவுக்கு, 2011ஆம் ஆண்டு ஜாக்பாட் அடித்தது. அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை வாரி வழங்கினார். இதில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றிபெற்று எதிர்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.

ஸ்டாலினுடன் விஜயகாந்த்
ஸ்டாலினுடன் விஜயகாந்த்

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக

அதிமுகவுடன் மோதல், விஜயகாந்தின் உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது தேமுதிக. 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இறுதிவரை கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக. ஆனால் திமுகவுடனான கூட்டணி பேச்சு திடீரென அடைபட்டதால், வேறு வழியின்றி மக்கள் நலக்ககூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால் அந்த தேர்தலிலும் தேமுதிக தோல்வியை சந்தித்தது. அந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக. 1000, 2000 என மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. மக்கள் நலக்கூட்டணி அமையாமல் இருந்திருந்தால் அல்லது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருந்தால் ஒருவேளை திமுக ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.

எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த்
எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த்

மாநில அந்தஸ்தை இழந்த தேமுதிக

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக படுதோல்வி அடைந்தது. கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுதிஷ் உள்ளிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர். அந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 2.19 விழுக்காடு வாக்குகன் மட்டுமே கிடைத்தது. ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், மாநிலத்தில் பதிவாகும் மொத்த வாக்கில் 8 சதவீதம் பெற வேண்டும். தேமுதிக கட்சி கடந்த இரண்டு தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே வாங்கியதால் மாநில அந்தஸ்தை இழந்தது.

அமமுகவுடன் கூட்டணி

இந்நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தேமுதிக. அப்போது திமுக, கூட்டணியை இறுதி செய்துவிட்ட போதிலும் அந்த கூட்டணியில் திமுக இணையும் என செய்திகள் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (மே 2) வெளியானது. இதில் ஒரு இடத்தில் கூட தேமுதிக வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை. விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக

தினகரனுடன் விஜயகாந்த்
தினகரனுடன் விஜயகாந்த்

எந்த கூட்டணியில் இணைந்தால் வெற்றி வாய்ப்பு என கணிக்க முடியாதது, காலம் கடந்து எடுக்கப்படும் முடிவு, விஜயகாந்தின் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தேமுதிக படுதோல்வியை சந்தித்துள்ளது. தொண்டர்கள் சோர்வு அடைய வேண்டாம், தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கை கண்டிப்பாக தேமுதிக தலைமையிடம் இருந்து வரலாம். ஆம். உண்மையிலேயே தோல்வி குறித்து ஆராயந்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது.

Last Updated : May 2, 2021, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.