ETV Bharat / city

கரோனா காலத்திலும் வென்ற மனிதநேயம் - மதவெறியர்கள் திருந்த வீரமணி வேண்டுகோள்! - வீரமணி

சென்னை : இறந்த முதியவரை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முஸ்லிம் தோழர்கள் முன்வந்து உதவினர் என்ற செய்தியின் மூலம், சிறுபான்மையினரை எதிர்த்து வெறுப்பு கக்கும் கூட்டத்தினர் சிந்தித்து நல்லுணர்வு மற்றும் மனிதநேயம் பெறுவது அவசியம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

veeramani
veeramani
author img

By

Published : Apr 21, 2020, 4:41 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சிறுபான்மைச் சமூகத்தவர்களான இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை, சமூக வலைத் தளங்களில் பரப்பியதோடு, சிற்சில மாவட்டங்களில், அவர்களை ஒதுக்கி வைக்கும் திட்டமிட்ட செயலையும் தொடங்கி, தமிழ்நாட்டில் தோல்வியே கண்டு வருகின்றனர்.

இன்று ஒரு நெஞ்சுருகும் செய்தி! சென்னை அண்ணா நகரில் சில நாட் களுக்கு முன் இராமச்சந்திரன் என்ற முதியவர் (78) இறந்து விட்டார். ஊரடங்கு, வீட்டுக்குள்ளே இருந்தாக வேண்டியக் கட்டாய உத்தரவு காரணமாக, அவரது உற்றார், உறவினர் எவருமே இறுதி அடக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழலில், செய்தி அறிந்து உடனடியாக அப்பகுதியிலிருந்த தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தோழர்கள் சதாம் உசேன், முகம்மது, ஜாகீர் உசேன், சதாம் உசேன், முகம்மது அலி, நிஜாமுதீன் ஆகியோர் மனிதாபிமானத்தோடு, மத மாச்சரியத்திற்கு மரணத்தில் ஏது இடம் என்ற உணர்வுடனும், சகோதரப் பாசத்துடனும் ஓடோடி வந்து, சடலத்தைத் தூக்கிச் சென்று கடைசி ஈமச் சடங்குகள் செய்து முடிக்கும் வரை மயானத்தில் இருந்து திரும்பியுள்ளனர்.

மத வேற்றுமை பாராது காலங்காலமாக இஸ்லாமியச் சகோதரர்களும், இந்து என்று அழைக்கப்படுவோரும், அண்ணன் - தம்பிகளாக உறவுக்காரர்கள்போல், பேதமின்றி, பெருவாழ்வு சமத்துவம் பொங்க வாழும் மண் இது. எனவே மதவெறியர்களே மாறுங்கள். சிறுபான்மையினரை எதிர்த்து வெறுப்பு கக்குவதை விடுத்து, சிந்தித்து நல்லுணர்வு மற்றும் மனிதநேயம் பெறுவது அவசியம் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சுங்கக் கட்டண வசூலை உடனடியாக நிறுத்த வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.