ETV Bharat / city

தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மாவட்டவாரியாக ஊரடங்கு தளர்வுகள்

சென்னை: கரோனா தொற்றை கட்டப்படுத்தும் விதமாக கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

curfew
curfew
author img

By

Published : Jun 5, 2021, 5:46 PM IST

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

”கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே, இம்மாவட்டங்களில், நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும் அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 7-6-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
  • அனைத்து அரசு அலுவலகங்களும், 30 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 விழுக்காடு டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர, இதர மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே, அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன்விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தனியார் சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
  • தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் அனுமதிக்கப்படும்.
  • மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
  • வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், புத்தகங்கள் விற்கும் ஸ்டேசனரி கடைகள், ஹார்டுவேர் கடைகள், இருசக்கரவாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், மின்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 விழுக்காடு டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்
  • வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.
  • மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகளும் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • ஜுன் 14ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்
  • டாஸ்மாக், சலூன், தேநீர் கடைகளை திறக்க அனுமதியில்லை” என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.