தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.
அவர் பேசியது பின்வருமாறு:
- புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் மாவட்டக் கருவூலங்கள் ஏற்படுத்தப்படும்
- தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சார் கருவூலத்திற்கு சுமார் 2,769 சதுர அடி பரப்பளவில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சார் கருவூலக் கட்டடம் கட்டப்படும்
- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் கருவூலம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சார் கருவூலம் ஆகியவற்றிற்கு புதிய சார் கருவூலக் கட்டடம் கட்டப்படும்
- கருவூல மற்றும் கணக்குத் துறை அலுவலகங்களில் மின் சுற்று தொலைக்காட்சி (சிசிடிவி) நிறுவப்படும்
- கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் தணிக்கை தகவல் மேலாண்மை முறை திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்படும்
- மாநில அரசுத் தணிக்கைத் துறையில் தணிக்கையாளர்களுக்குத் தரவு மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு குறித்த பயிற்சி அளிக்கப்படும்
- மாநில அரசுத் தணிக்கைத் துறை தணிக்கை மேற்கொள்ளும் அனைத்து நிறுவனங்களின் பெயர் மற்றும் தணிக்கை மேற்கொள்ள ஆணையிடப்பட்ட அரசாணைகள் தொகுப்பு வெளியிடப்படும்
- மாநில அரசுத் தணிக்கைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் துறைகளின் தணிக்கையை வலுப்படுத்தும் வகையில் ஒரு குழு அமைத்து புதிய செயல் திட்டம் உருவாக்கப்படும்
- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் மாநில அரசுத் தணிக்கைத் துறை சார்பாக செயல்படும் ஆய்வர் பணியிடத்தினை உதவி இயக்குநர் பணியிடமாக தரம் உயர்த்தப்படும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எம்எல்ஏக்களுக்கு புதிய சலுகைகள் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு