ETV Bharat / city

தற்கொலைகளை தடுப்பது குறித்து ஜக்கி வாசுதேவுடன் கலந்துரையாடல்

தற்கொலைகளை தடுப்பது குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவுடன் ஐபிஎஸ் அலுவலர்கள் கலந்துரையாடினர்.

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்
author img

By

Published : Sep 14, 2021, 9:50 AM IST

சிறை கைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இந்திய அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ். அலுவலர்கள் கலந்துரையாடினர்.

அந்த கலந்துரையாடலில் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது, "உங்கள் சொந்த புத்திசாலித்தனமே உங்களுக்கு எதிராக செயல்படும் மிக மோசமான நிலையே தற்கொலை ஆகும். ஆகவே, உலகில் உயிர் வாழ்வது தான் உச்சப்பட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்க வேண்டும்.

யோகா பயிற்சி

மனிதர்களின் உள் அனுபவமானது வெளியில் இருந்து சேகரித்த விஷயங்களில் அடிமையாகாமல்,வாழ்வின் அடிப்படை அம்சங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இதற்கு யோகா பயிற்சிகள் உதவி புரியும்.

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்

யோகா மூலம் ஒருவர் தனக்குள் மகிழ்ச்சிக்கான வேதியியல் மாற்றங்களை தானே உருவாக்கி கொள்ள முடியும். இது சமூகம் கட்டமைத்துள்ள வெற்றி கோட்பாடுகள் அல்லது மதிப்பீடுகளுக்குள் சிக்கி உணர்ச்சி சமநிலையை இழக்காமல் அவர்களை பாதுகாக்கும்.

நாட்டில் இருக்கும் சட்டங்கள் மூலம் சட்டத்தை மீறுபவர்களை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அவர்களுக்குள் உள்நிலை மாற்றத்தை உருவாக்க முடியாது. ஆனால் யோக பயிற்சிகள் மூலம் ஒருவர் தான் விரும்பும் உணர்வை தனக்குள் உருவாக்கி கொள்ள முடியும்.

ஈஷா தயார்

இதை சாத்தியப்படுத்த சிறை கைதிகள் மற்றும் அலுவலர்கள்,
சட்ட அமலாக்க துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேசிய அளவில் யோகா வகுப்புகளை நடத்த ஈஷா தயாராக உள்ளது.

மென்மையான சூழல்

இதுதவிர, சிறைகளில் கலை மற்றும் கலாச்சார அம்சங்களை ஊக்குவிப்பதன் மூலம் அங்கு மென்மையான சூழலை உருவாக்கி சிறை கைதிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்றார்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போபாலில் உள்ள மத்திய காவலர் பயிற்சி மையம் (Central Academy for Police Training) மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Bureau of Police Research and Development) சார்பில் இந்த கலந்துரையாடல் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

இதையும் படிங்க : மெல்ல கசந்துபோகும் திருமண வாழ்க்கை... தம்பதிகள் செய்ய வேண்டியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.