இது தொடர்பாக மாற்றுத்திறனுடையோர் சங்க கூட்டியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா பேரிடர் ஊரடங்கு வாழ்வாதார நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், அரசு அறிவித்துள்ள இந்த மிகக் குறைந்த தொகை எவ்விதத்திலும் போதாது என்பதாலும், உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கடன் பெற வேண்டியுள்ளதாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
தெலங்கானா அரசு 3,016 ரூபாய், ஆந்திர 2,500 ரூபாய், கேரளா 1300 ரூபாய், புதுச்சேரி அரசு குறைந்தபட்சம் 1,500 முதல் 3,300 ரூபாய் வரை என அண்டை மாநிலங்களில் மாதாந்திர உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒருசில பிரிவினரைத் தவிர மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய், அதுவும் சுமார் மூன்றில் ஒரு பங்கு பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கி வருவதையும் முதலமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும்“ என்று கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமாவளவனின் கோரிக்கையை ஏற்ற தென்னக ரயில்வே!