தமிழ்நாட்டில் 19 ஆரம்பகால பயிற்சி மையங்களில் 500 புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அக்குழந்தைகள் ஒளி, சத்தம் மற்றும் தொடுதலுக்கு மிகுந்த உணர்திறன் அல்லது குறைந்த உணர்திறன் கொண்டவர்கள். அவர்களுக்கு தொடர்ச்சியான உணர்திறன் செயலாக்கம் மற்றும் மேம்பாட்டு சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும், ஊரடங்கின் போது இக்குழந்தைகளைகளின் பெற்றோர் இவர்களை வீட்டிற்குள்ளே வைத்து பராமரிப்பது கடினம்.
எனவே, அக்குழந்தைகளுக்கு வீட்டிலேயே வைத்து பயிற்சி வழங்கிட பந்து, விசில், டார்ச் லைட், நுரைக்குமிழ், கட்டுமான தொகுதிகள், பாசிமணி (Beads) உள்ளிட்ட 11 வகையான பயிற்சி பொருட்களும், இரண்டு வகையான சிறப்பு உணவு பொருட்களும் உள்ளடக்கிய சிறப்பு மறுவாழ்வு பயிற்சி பெட்டகம் பெற்றோருக்கு வழங்குவதற்காக 19 மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின் விளைவாக, புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு சிறந்த கவனம் செலுத்துதல், மேம்பட்ட நடவடிக்கை மற்றும் பதட்டத்தைக் குறைக்க இயலும். இந்த சிறப்பு மறுவாழ்வு பயிற்சி பெட்டகம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மூலம் தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கு வழங்கப்படும்.
இதையும் படிங்க: மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு - முதலமைச்சர் இல்லம் நோக்கி புறப்பட்ட 5 சிறுவர்கள்!