ETV Bharat / city

தனுஷ்தான் முதலில் வாழ்த்தினார் -  காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி - Was the first to congratulate Dhanush

காந்தாரா திரைப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 16, 2022, 7:47 AM IST

சென்னை: காந்தாரா திரைப்படத்தின் இயக்குநரும், காநாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நேற்று (அக்.15) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், படத்தில் வரும் 'ஓ' என்ற சத்தம் எந்த ஒரு மொழி பெயர்ப்புகளிலும் சிறப்பாக அமையவில்லை. ஆகவே, அதை நான் டப் செய்த கன்னட மொழியிலிருந்து வைக்கப்பட்டது. அதேபோல், அதை ரீலாகவோ அல்லது மறுபடியும் ஒரு முறை பண்ண சொல்லி ஈடுபட வேண்டாம். ஒரு சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் அமையக்கூடாது.

படத்தில் எருமைகளை வைத்து பந்தயம் நடத்தப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் போது ப்ளூ கிராஸ் போன்ற பிரச்சினைகள் வரும். அதை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அது நம்முடைய உணர்வுகள், நம்ம கலாச்சாரம் அதை எங்கும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாது. மாடு, எருமைகளை வீட்டில் வைத்து விட்டு தேவைப்படும்போது மட்டும் அதை பயன்படுத்திக் கொள்கிறோம். நான் ரஜினி, மற்றும் கமல் ஹாசன் இருவரின் ரசிகன். அஜித் விஜய் ஆகியோரையும் பிடிக்கும்.

'காந்தாரா' என்பதன் பொருள் ஒரு மர்மமான காடு என்பதாகும். நான் சென்னைக்கு வந்ததுமே தனுஷ்தான் முதல் முதலில் வாழ்த்தினார். அவரை தொடர்பு கொண்டு பேசினேன். மிகவும் பாராட்டினார். அவரது படங்களை பார்த்துள்ளேன். ஒரு முன்னுதாரணமான நடிகர். அவர் என் படத்தை பார்த்து பாராட்டியது சந்தோஷமான விஷயம். கார்த்தியும் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்.

அப்பா, அம்மாவை அழைத்துச் சென்று பார்க்கும்படி கேட்டேன். இப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டேன். கம்பாலா போட்டிக்காக ஒருமாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அந்தந்த மொழிகளின் கலாச்சாரத்தை தான் படங்களாக எடுத்து வருகிறோம். வனத்துறையினருக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை இப்படம் மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சென்னையில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி பேட்டி

இதையும் படிங்க: மாதவிடாய் காரணமாக ‌ 25% மாணவிகள் கல்வியை தொடர முடிவதில்லை - ஆய்வில் அதிர்ச்சி

தனுஷ்தான் முதலில் வாழ்த்தினார் - காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.