ETV Bharat / city

கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் உத்தரவு! - ஊரக வளர்ச்சி துறை

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

grama sabha
கிராம சபைக் கூட்டம்
author img

By

Published : Jan 21, 2020, 10:11 PM IST

குடியரசு தினம் வரும் 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்க உள்ளது.

இதற்காக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் (சென்னை தவிர) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

'வரும் 26ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டம் நடக்க உள்ளது குறித்து, முன்னதாகவே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் குறித்து விவாதித்தல், மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள், குடிமராமத்து திட்டப் பணிகள், டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் மேலும் அரசின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.

இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தி பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: குடியரசு தின விழாவில் அணிவகுக்கும் பள்ளி மாணவர்கள்

Intro:Body:

குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளில் கிராம சபை நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

குடியரசு தினம் வரும் 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ( சென்னை தவிர) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வரும் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டம் நடக்க உள்ளது குறித்து முன்னதாகவே மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும். கூட்டத்தில் அணைத்து உறுப்பினர்களும் வருகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள், குடிமராமத்து திட்ட பணிகள், டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும் கூட்டத்தை சிறப்பாக நடத்தி பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் ஊரக வளர்ச்சி துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உததரவிட்டுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.