ETV Bharat / city

தமிழ்நாடு அரசைப் பாராட்டி இயக்குநர் அமீர் அறிக்கை! - The final messenger Prophet Muhammad

சென்னை: முகமது நபியை பொதுவெளியில் கொச்சைப்படுத்தி பேசிய கல்யாணராமனை கைது செய்ததற்காக தமிழ்நாடு அரசை பாராட்டி இயக்குனரும் நடிகருமான அமீர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

இயக்குனரும் நடிகருமான அமீர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Feb 1, 2021, 10:23 PM IST

அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முகமது நபி அவர்களை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமன் என்னும் அயோக்கியனை கைது செய்த தமிழ்நாடு அரசிற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும், வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு பயணிக்கும் பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற வலதுசாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த நேரத்தில் முகமது நபியின் மீது பேரன்பு கொண்ட சமூகத்தினர் பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் எதிர்பார்க்கின்ற எதிர்வினைகளை ஆற்றாது அமைதியாகவும் ஒற்றுமையாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. முகமது நபியின் தத்துவங்களையும் அவரின் சமூக செயல்பாட்டையும் மனித குலத்திற்கு அவர் ஆற்றிய பங்கையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நினைவு படுத்துகிறேன்.

தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளை மறக்கடிக்கும் விதமாகவும் தமிழ்நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்ட கல்யாணராமனை கைது செய்தது போல, தேச விரோத, சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபடும் வேலூர் இப்ராஹிமையும் கைது செய்து அவர்கள் இருவரின் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை கைது செய்தது ஏன்? ஹெச்.ராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.