ETV Bharat / city

வாடகை பாக்கி ரூ.52 லட்சம் செலுத்துக: 'அண்ணா நகர் கிளப்'புக்கு கெடு...! - வாடகை பாக்கி 52 லட்ச ரூபாயை ஒரு மாதத்திற்குள் செலுத்த சென்னை அண்ணா நகர் கிளப்பிற்கு கெடு

வாடகை பாக்கி 52 லட்ச ரூபாயை ஒரு மாதத்திற்குள் செலுத்த சென்னை அண்ணா நகர் கிளப்பிற்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், செலுத்தத் தவறும்பட்சத்தில் அந்த கிளப்பை அப்புறப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jan 20, 2022, 1:45 PM IST

சென்னை: சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில் செயல்பட்டுவரும், அண்ணா நகர் கிளப்பில் மதுபான கூடத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த வீட்டு வசதி வாரியம் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை முதலில் செலுத்துமாறு கடிதம் அனுப்பியது.

இதனை எதிர்த்து அண்ணா நகர் கிளப் செயலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

அதில், நிலுவையில் இருந்த 52 லட்சத்து 25 ஆயிரத்து 960 ரூபாய் வாடகை பாக்கியில் 20 லட்ச ரூபாயை செலுத்திவிட்டதாகவும், இருப்பினும் மீதமிருக்கும் நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளதால், அதனை ரத்துசெய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் கிளப் செயல்படுவதால், அதனுடைய விதிகளைத்தான் பின்பற்ற வேண்டுமெனவும், அதன் விதிகளை மீறி மனுதாரர் எந்த அனுமதியும் கோர முடியாது என்றும் தெரிவித்தார்.

அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் கிளப்பை அப்புறப்படுத்தலாம் எனவும், பார் செயல்படுவதற்குத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மேலும், 7 கிரவுண்டில் செயல்பட்டுவரும் கிளப்புக்கு வாடகையாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுவதாகவும், தற்போதைய சந்தை மதிப்புப்படி தகுந்த வாடகையை நிர்ணயிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமானது என்பதால் அதற்கு ஏற்படும் வருவாய் இழப்பு தமிழ்நாட்டு அரசுக்கான வருவாய் இழப்பு எனத் தெரிவித்துள்ள நீதிபதி, நிலுவை வாடகையைச் செலுத்தத் தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என கிளப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்.

நியாயமான வாடகையை நிர்ணயித்தும், நிலுவையில் உள்ள வாடகைத் தொகையைக் கணக்கிட்டும் அதனை 30 நாள்களில் கிளப் நிர்வாகத்திற்கு அனுப்ப தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்தக் கடிதம் கிடைத்ததிலிருந்து நான்கு வாரங்களுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டுமென கிளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு செலுத்தவில்லையெனில் கிளப்பை காலிசெய்வது, நிலுவைத் தொகை, அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: 7 இடங்களில் அகழாய்வு: இனி இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.