ETV Bharat / city

கரோனா பரவலுக்கிடையே ஆசிரியர்களுக்கு நேரடியாக புத்தாக்கப் பயிற்சியா?

வேகமெடுக்கும் கரோனா தொற்றுக்கிடையே ஆசிரியர்களுக்கு நேரடியாகப் புத்தாக்கப் பயிற்சி என்பது வேண்டியது இல்லை என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரோனா
கரோனா
author img

By

Published : Jan 18, 2022, 5:51 PM IST

சென்னை: கரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ஆன்லைன் மூலம் நடத்திட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐபெட்டோ (IBETO) அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சருடைய செயல்பாடுகள் அனைத்து தரப்பினராலும் நெகிழ்ந்து பாராட்டும் வகையில் அன்றாடம் நடைபெற்று வருவதைக்கண்டு மகிழ்ந்து வருகிறோம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கவனம் தேவை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மிகவும் ஆர்வம் உள்ளவர். ஓய்வறியாது செயல்படக் கூடியவர், முற்றிலும் வெளிப்படைத்தன்மை உடையவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனாலும், சில அலுவலர்கள் அன்றாடம் ஆசிரியர் விரோதச் செயல்பாடுகளில் உள்நோக்கத்துடன் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர் என்பதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பார்வைக்குப் பலமுறை கொண்டு வந்தும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்பதை வேதனை உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

உயர் நிலைப் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே தொடக்கக்கல்வித்துறையில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும், கற்பித்தல் பணியினை, பள்ளிச்சூழலினை அவர்களுக்கு மலரச் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், சுகாதாரத்துறை எடுத்த முடிவுதான் இறுதியாகப் போனது என்பதை உணர்கிறோம்.

ஆசிரியர்கள் நலனில் அக்கறை வேண்டும்

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

ஆனால், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வரும் காலத்தில் பிடிவாதமாகத் திறன் வலுவூட்டல் பயிற்சி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பயிற்சிக்குச் சென்று வருகின்ற ஆசிரியர்கள் மாவட்டங்கள் வாரியாக தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அரியலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பயிற்சி காலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலைப் பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுப்பி இருந்தோம்.

அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மீண்டும் பயிற்சியினை 19ஆம் தேதி முதல் தொடங்கி நடத்திட அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு பள்ளிக்கு வருவதில் விலக்கு கிடைத்தாலும், ஆசிரியர்களுக்கு கிடைத்தபாடில்லை.

ஆறாத் துயரில் ஆசிரியர்கள்; அரசு கவனம் தேவை

பயிற்சி மையத்தில் கரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசிரியர் குடும்பங்களை இழந்து இன்னமும் ஆறாத் துயரில் இருந்து மீள முடியாமல் உள்ளோம்.

மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்படும் எண்ணிக்கை பெருகி உடல் நலச் சேதாரம், உயிர்ச்சேதாரம் ஏற்படுமேயானால் காலம் முழுவதும் அரசுக்கு மிகப்பெரிய சங்கடத்தை உருவாக்கி விடுமோ என்று எங்களைப்போன்ற உணர்வாளர்கள் அச்சப்பட்டு வருகிறோம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பயிற்சியினை நடத்தித்தான் ஆக வேண்டும் என்றால் இணைய வழியிலாவது நடத்தத் திட்டமிட்டுப் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.