நித்யானந்தா தனது சீடர்களிடம் வாரந்தோறும் இணையதளம் மூலம் காணொலி காட்சி வாயிலாக உரையாடுவார்.
அவ்வாறு நித்யானந்தா தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியதாவது,''நான்' என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை. நான் பிரபஞ்சத்தில் எதையும் நகர்த்த முடியும் என்று உணர்கிறேன். முழுமையான தனிமையை உணர்கிறேன். ஆனால், தனிமையில் சோர்வு அல்லது சலிப்பு இல்லை' என்று கூறினார்.
மேலும் தனது உடல் நலம் பற்றி நித்யானந்தா, 'இப்போது நான் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தருணம், அனைத்து நாடிகளும் குடியேறிவிடுகின்றன. நான் என் கண்களைத் திறக்கவும், என்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியவும் முடிகிறது. நான் ஒருவரைச் சந்திக்கும்போது அவர்களின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் பார்க்க முடியும்.
நான் மிகவும் வசதியாகவும், ஓய்வாகவும் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும்போது, பகல் மற்றும் இரவுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருக்கிறேன். எனது உடல் மருத்துவரீதியாக ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், இன்னும் 1 இட்லி கூட சாப்பிட முடியவில்லை. தொடர்ந்து 21 நிமிடங்கள் கூட தூங்க முடியவில்லை' என்று தெரிவித்தார்.
கைலாசா பற்றி நித்யானந்தா, 'நான் முழு நேர்மையான வாழ்க்கையை இதுவரை வாழ்ந்தேன். எனது எதிர்காலம் மிகவும் உற்சாகமாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனது குருவின் அருளால், நான் ஏற்கெனவே கைலாசம் மற்றும் பல கைலாசவாசிகளை உருவாக்கினேன். அவர்கள் 'கைலாசா' பணியை மேற்கொள்வார்கள்.
எனக்கு இந்த கிரகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற பேராசையும் இல்லை. இந்த கிரகத்தை விட்டு வெளியேற வெறுப்பும் இல்லை' என்று கூறினார்.
இதையும் படிங்க: பண மழை பொழிய வேண்டாம்- சீடர்களுக்கு நித்யானந்தா வேண்டுகோள்!