ETV Bharat / city

கரோனா தடுப்புப் பணி: காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு

சென்னை: கரோனா நோய் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கு தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் திரிபாதி பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார்.

author img

By

Published : Apr 15, 2020, 10:32 AM IST

கரோனா தடுப்பு பணி: காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு

கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், காவல் துறையினர் கரோனா நோய் பரவாமல் தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்களிடம் பல்வேறு விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கு தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் திரிபாதி பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கூறியுள்ள அவர், "கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினரின் பங்கு மிகவும் முக்கியமானது. கரோனா பாதுகாப்பு தவிர சட்டம் ஒழுங்கு பிரச்னைகளிலும், குற்றங்கள் நிகழ்ந்தால் அதனைத் தடுக்கும் பணியிலும் காவல் துறையினர் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்" என்று பெருமிதம் கொண்டுள்ளார்.

மேலும், "மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள், வார்டுகள் என அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் சுகாதாரத் துறை அலுவலர்களோடு இணைந்து பணியில் ஈடுபடுவதால் தங்களது குடும்பங்கள் மற்றும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கரோனா தொற்றைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் பொதுமக்களின் வங்கி எண் மற்றும் ஏடிஎம் பாஸ்வேர்டை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதனைத் தடுக்கும் பணியிலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "விழிப்புணர்வு இல்லாமல் வெளியில் சுற்றும் பொதுமக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொடர்பான வெறுப்பு குற்றங்கள் குறித்து மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். கரோனா தொடர்பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்களைக் காக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனா பாதித்த டெல்லி இளைஞர் பிடிபட்டார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.